Saturday, November 24, 2012

இஸ்லாமிய தண்டனை வேண்டும்

· الزَّانِيَةُ وَالزَّانِي فَاجْلِدُوا كُلَّ وَاحِدٍ مِنْهُمَا مِائَةَ جَلْدَةٍ وَلَا تَأْخُذْكُمْ بِهِمَا رَأْفَةٌ فِي دِينِ اللَّهِ إِنْ كُنتُمْ تُؤْمِنُونَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ وَلْيَشْهَدْ عَذَابَهُمَا طَائِفَةٌ مِنْ الْمُؤْمِنِينَ · وَالسَّارِقُ وَالسَّارِقَةُ فَاقْطَعُوا أَيْدِيَهُمَا جَزَاءً بِمَا كَسَبَا نَكَالًا مِنْ اللَّهِ وَاللَّهُ عَزِيزٌ حَكِيمٌ · தமிழகத்தில் ஆள் கடத்தி பணம் பறித்தல் அதிகரித்துவருகிறது. · கோவையில் இரு சிறுவர்கள் பலி – சிறுமி முஷ்கின்,சிறுவன் ரித்திக் · சென்னையில் ஒரு சிறுவன் கடத்தில் · அப்பாவிச் சிறுவர்கள் அரக்கத்தனமாக கொலைசெய்யப்பட்டதை கண்டு, கோவை நகரமும் தமிழகமும்பத்றிப்போய் விட்டது. · குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை – உடனடியாகவழங்கப் பட வேண்டும் · மக்களின் ஆவேசம் - அரபு நாட்டு தண்டனைகொடுக்கனும். · அது அரபு நாட்டு தண்டனை அல்ல. இஸ்லாமியதண்டனை. · இஸ்லாமிய தண்டனையை போலியானமனிதாபிமானிகள் குறை கூறுவதுண்டு · சில மாதங்களுக்கு முன் தமிழகத்தின் ஒரு மூத்த்முஸ்லிம் எழுத்தாளர் · கல்லெறிந்து கொல்லுதல் போன்ற தண்டனைகளைநாகரீகமே அல்ல என்றார். ஒரு படி மேலே சென்றுஇஸ்லாம் அப்படிச் சொல்லியிருக்காது என்றும் பேசினார். · அவருடைய தவறை திருத்திய நான் இஸ்லாமியசட்ட்த்தில் அத்தகைய தண்டனை உண்டு என்றுவிளக்கினேன். · கடுமையான தண்டனைகளுக்கான நிபந்தனைகளும்கடுமையானவைதான் என்று விளக்கினேன். · உதாரணத்திற்கு விபச்சாரம் நான்குபேர் நேரடியாகப்பார்க்கும் அளவு நடை பெற்றால்தான் கல்லெறிதண்டனை. · என்ன இருந்தாலும் இந்த தண்டனை டூ மச், அன்றையபழக்க வழக்கத்திற்கு இது பொருந்தலாம். இந்த நாகரீகஉலகிற்கு பொருந்தாது என்றார். · (சிறிது நேரம் பேச்சை வேறு திசையில் செலுத்தியபிறகு) · ஒரு ரவுடி பட்டப் பகலில் நான்குபேர் பார்க்க ஒருபெண்ணை கற்பழித்தால் என்ன செய்வது என்றுகேட்டேன். அவரே சொன்னார் கல்லால அடிச்சு கொன்றவேண்டியது தான். · இப்போது கோவை நகர மக்கள் சொல்கிறார்கள் :குழந்தைகளை கற்பழித்து கொன்றவனை எங்களிடம்கொடுங்கள் அவனை அடித்தே கொல்ல வேண்டும். · நாம் விரும்புகிற போது அந்த தண்டனை சரி- மற்றசூழ்நிலையில் சரியல்ல என்ற கண்ணோட்டம்தவறானது. · அல்லாஹ் பேர்ரறிவாளன் எது கடுமையான் குற்றம்என்பதை அவனைவிட சரியாக யார் கனிக்க முடியும். · சில குற்றங்கள் நமக்கு சிம்பிளாக தோன்றினாலும் அதுசிம்பிள் அல்ல.என்வே தான் அல்லாஹ் கடுமையானதண்டனைகளை வழஙகினான். பெருமானாரின் காலத்தில் பைத்துல் மாலின் ஒட்டைகையைதிருடி அதன் காவலாளியை கொலை செய்த “உகல்”“உரைனா” குழுவிற்கு மாறுகால் மாறுகை வாங்கப் பட்ட்து.பாலைவன மணலில் வீசப்பட்டார்கள். عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ قَدِمَ أُنَاسٌ مِنْ عُكْلٍ أَوْ عُرَيْنَةَ فَاجْتَوَوْا الْمَدِينَةَ فَأَمَرَهُمْ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِلِقَاحٍ وَأَنْ يَشْرَبُوا مِنْ أَبْوَالِهَا وَأَلْبَانِهَا فَانْطَلَقُوا فَلَمَّا صَحُّوا قَتَلُوا رَاعِيَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَاسْتَاقُوا النَّعَمَ فَجَاءَ الْخَبَرُ فِي أَوَّلِ النَّهَارِ فَبَعَثَ فِي آثَارِهِمْ فَلَمَّا ارْتَفَعَ النَّهَارُ جِيءَ بِهِمْ فَأَمَرَ فَقَطَعَ أَيْدِيَهُمْ وَأَرْجُلَهُمْ وَسُمِرَتْ أَعْيُنُهُمْ وَأُلْقُوا فِي الْحَرَّةِ يَسْتَسْقُونَ فَلَا يُسْقَوْنَ قَالَ أَبُو قِلَابَةَ فَهَؤُلَاءِ سَرَقُوا وَقَتَلُوا وَكَفَرُوا بَعْدَ إِيمَانِهِمْ وَحَارَبُوا اللَّهَ وَرَسُولَهُ - بخاري 233 காரணம் அவர்களுடைய குற்றம் அத்தகையது. குற்றத்திற்குதகுந்த தண்டனை இஸ்லாமிய தண்டனைகளுக்குஇரண்டு நோக்கம் 1. ஒன்று தண்டனை جَزَاءً بِمَا كَسَبَا 2. இரண்டு மற்றவர்களுக்கு ஒரு பாடம் نَكَالًا مِنْ اللَّهِ இது போன்ற குற்றங்களை தடுக்க · தண்டனைகள் சாமன்யமாக இருக்க்க் கூடாது. இனியாரும் அந்த்க் குற்றத்தை செய்ய பயப்படனும் – · தணடனை விரைவாக வழங்கப் பட வேண்டும் Ø கோவை விவசாய கல்லூரி மாணவிகள் சென்றபஸ்ஸுக்கு தீ வைத்து மூன்று மாணவிகளைகொன்றவர்களுக்கு இன்னும் தண்டனை வழங்கப்படவில்லை. Ø ராஜீவ் காந்தி கொலையாளிகளுக்கு Ø ஈரோட்டை சேர்ந்த முதியவ்ரை சொத்துக்காககட்த்தியதற்காக பதவி பறிக்கப் பட்ட ஒரு முன்னாள்அமைச்சருக்கு மீண்டும் பதவி வழங்கப் பட்டுள்ளது. · தண்டனை பலரின் முன்னிலையில் வழங்கப் படவேண்டும் - · وَلْيَشْهَدْ عَذَابَهُمَا طَائِفَةٌ مِنْ الْمُؤْمِنِينَ · அமெரிக்க டெக்ஸாஸ் மாநில கவர்னர் வெள்ளைமாளிக்க்கு ஒரு கடிதம் எழுதினார். போதைப் பொருள்கட்த்தல்கார்ர்களுக்கு வழங்கப் படும் மரண தணடனையவீடியோவில் பதிவு செய்து மக்களுக்கு காட்ட அனுமதிகோரினார். · குற்றவாளிகள் எல்லா நிலையிலும் சமூகம்புறக்கணிக்க வேண்டும் Ø மாணவிகளை எரித்துக் கொன்ற குற்ற வாளிகளைஅரசியக் கட்சிப் பிரமுகர்கள் சந்திக்கிறார்கள்.அப்படியானால் உனக்கு நாங்கள் இருக்கிறோம் என்றுஊக்கம் தருவதாக ஆகாதா? · சமய் ஜாதி கட்சி வேறுபாடு பார்க்க்க் கூடாது. عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ قَالَ مَنْ نَصَرَ قَوْمَهُ عَلَى غَيْرِ الْحَقِّ فَهُوَ كَالْبَعِيرِ الَّذِي رُدِّيَ فَهُوَ يُنْزَعُ بِذَنَبِهِ மேலும் பல நடவடிக்கைகள் அவசியம் பள்ளி செல்லும் குழந்தைகளை பெற்றோர் கண்காணிப்பது பள்ளிகள் ரேடியோ ஐடி கார்டு கொடுப்பது – எங்கிருக்கிறார்கள்என்று சிக்னல் கொடுத்து விடும் கால் தெரிகிற மாதிரி அணியும் யூணிபார்ம்களை ( Pinofore )தவிக்க வேண்டும் – இந்துப் பத்ரிகை நேற்றைய செய்தி pg 2 http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/article867856.ece

Thursday, August 5, 2010

இறைவனை நினைவு கூறும் வழிமுறைகள்

ஒரு நம்பிக்கையாளர் தன் இலக்கான சுவனத்தை அடைவதற்கு இறைவனை நினைவு கூறுபவராக இருத்தல் அவசியம். அதிலும் ரமலானை அடைய இருக்கும் இந்நேரத்தில் எவ்வாறு நம் அன்றாட வாழ்வில் எவ்வித பாதிப்புமில்லாமல் அதே சமயம் இறை நினைவுடனும் இருப்பது என்பது குறித்து பார்ப்போம்.

நமது தனிப்பட்ட வாழ்க்கை, அலுவலக வாழ்க்கை, குடும்ப வாழ்க்கை, சமூக வாழ்க்கை ஆகிய அனைத்தும் எவ்வித பாதிப்புமில்லாமல் அதே சமயம் இறைவனை எந்நேரமும் நினைவு கூறக் கூடியவர்களாகவும் இருப்பது கடினமானதாக தோற்றமளிக்கலாம். ஆனால் அது எளிமையாக இருக்க வேண்டுமானால் கீழ்காணும் நான்கை நாம் முறையாக கடைபிடித்தால் இவ்வுலகும் மறுவுலக வாழ்வும் சிறப்பாக அமையும் என்பது எனது நம்பிக்கை. முயன்று தான் பார்ப்போமே?

1. எப்போதும் என்னை இறைவன் கண்காணித்தவனாக இருக்கிறான்

நாம் தனியாக இருந்தால் இரண்டாமனாகவும் இரண்டு பேர் இருந்தால் மூன்றாமவனாகவும் அல்லாஹ் இருக்கிறான். நாடி நரம்பை விட சமீபத்தில் இருக்கிறான். நாம் செய்யும் அனைத்து செயல்களையும் பார்ப்பவனாகவும் நாம் பேசும் அனைத்தையும் செவியுறுபவனாகவும் அல்லாஹ் இருக்கிறான். அவன் இருளிலும் பகலிலும் என எல்லா இடங்களிலும் இருப்பவற்றை அறிய கூடியவனாக இருக்கிறான்.

ஒரு நாளின் எந்த செயலை செய்ய ஆரம்பிக்கும் போதும் எச்சொல்லை சொல்லும் முன்பும் இதை நினைத்து கொள்ளுங்கள். உங்களுக்கு நீங்களே நினைவூட்டி கொள்ளுங்கள். இந்நினைவு உங்கள் சுவாசமாக மாறும் அளவு இதை உங்கள் மனதில் இருத்தி கொள்ள வேண்டும். ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் உள்ளத்தை தூய்மைபடுத்த சிறந்த வழியை கேட்ட போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) சொன்னார்கள் " நீ எங்கே இருந்தாலும் என்ன செய்தாலும் அல்லாஹ் உன்னுடன் இருக்கிறான் என்று நினைத்து கொள்" (திர்மிதி)

2.என்னிடம் இருப்பவை அனைத்தும் இறைவன் அளித்ததே

நம்மிடம் இருப்பவை அனைத்தும் இறைவன் அளித்த அருட்கொடையே. நாம் மனிதனாக பிறந்தது, முஸ்லீமாக இருப்பது, நம் வாழ்வியல் வசதிகள், நம் அறிவு, ஞானம், பதவி உள்ளிட்ட அனைத்தும் இறைவனின் அருட் கொடையே. எனவே நம்மிடம் இருப்பவைக்கு அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்த கூடிய அடியானாக இருக்க வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் இறைவனை புகழ பல துஆக்களை கற்று தந்துள்ளார்கள். அவற்றை நம் வாழ்வின் எல்லா செயல்களிலும் கடைப்பிடிக்க வேண்டும். உதாரணத்திற்கு காலையில் கண் விழித்தாலும் ஏதேனும் உணவு உட்கொண்டாலோ இறைவனுக்கு அல்ஹம்துலில்லாஹ் என்று நன்றி சொல்லக் கூடியவராக இருந்தார்கள்.

நாம் நன்றி சொல்லி விட்டோம் என்று திருப்தி ஏற்பட்டால் இந்த ஹதீதை வாசித்து பாருங்கள் " உடம்பில் உள்ள 360 இணைப்புகளுக்காவும் நீங்கள் ஒவ்வாரு இணைப்புக்கும் ஸதகா தினந்தோறும் செய்ய வேண்டும்" என்று நபி (ஸல்) அவர்களின் கூற்றை நாம் புகாரியில் காணலாம். அறிவியலாளர்களின் கூற்று படி நம் இதயம் சராசரியாக ஒரு நிமிடத்திற்கு 72 தடவை துடிக்கிறது. அத்துணை தடவையும் அல்லாஹ்வின் அனுமதியுடன் தான் துடிக்கிறது. அல்லாஹ் துடிக்க அனுமதி கொடுக்கவில்லையென்றால் நம் நிலை? எனவே நாம் அனைத்திற்கும் நன்றி செலுத்த கூடியவர்களாக வேண்டும்

3. இறைவனின் நாட்டமின்றி எனக்கு எதுவும் நேராது

இறைவன் விதித்ததை தவிர வேறு எந்நன்மையும் எத்தீங்கும் நேராது என்பதில் முழு நம்பிக்கை இருக்க வேண்டும். திருமறையின் 6ஆம் அத்தியாத்தில் 17,18 வசனத்தில் குறிப்பிடுவது போன்று நன்மையும் தீமையும் இறைவனின் நாட்டப்படியே நடக்கின்றன. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒவ்வொரு தொழுகைக்கு பிறகும் இவ்வாறு துஆ கேட்டார்கள் " நீ எனக்கு கொடுக்க நினைப்பதை யாராலும் தடுக்க முடியாது. நீ எனக்கு தடுக்க நினைப்பதை யாராலும் கொடுக்க இயலாது" (புகாரி)

4. ஒரு நாள் இறைவனிடம் செல்ல போகிறேன். அது இன்றாகவும் இருக்கலாம்

எம்மனிதனுக்கும் தாம் எப்போது இவ்வுலகை விட்டு செல்ல இருக்கிறோம் என்பது தெரியாது. அது அன்று மாலையாக, அடுத்த நாள் காலையாக அல்லது அப்போதே கூட இருக்கலாம். எனவே இச்சிந்தனை நம்மிடம் வந்து விட்டால் இது தான் என்னுடைய கடைசி தொழுகை என்று நினைத்து தொழுதால் கண்டிப்பாக அத்தொழுகை ஊசலாட்டமில்லாமல் இருக்கும். அது போல் நாம் இந்நினைவுடன் எல்லா காரியங்களும் செய்தால் இறைவன் நாடினால் அது அவனால் ஏற்று கொள்ளப்பட கூடிய ஒன்றாக இருக்கும் இன்ஷா அல்லாஹ்.

எனவே வர கூடிய ரமலானை பயன்படுத்தி இந்நான்கு நிலைகளை நம்மில் கொண்டு வருவோம். அதை நம் முழு வாழ்விலும் ஸ்திரப்படுத்துவோம். இதை படிக்கும் சகோதரர்கள் தங்களின் துஆவில் எனக்கும் இந்நிலையை இறைவன் கொடுக்க பிராத்தியுங்கள்.

Kilai Rahman

Tuesday, July 27, 2010

இருந்தாலும் ... நான் ஒரு முஸ்லிம்

நான் சரியான இஸ்லாமிய அடிப்படையில் வாழ்கிறேனோ இல்லையோ, இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!

மார்க்க சம்பந்தமான அறிவு எனக்கு இருக்கிறதோ இல்லையோ, இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!

என் மனைவி – மக்கள், குடும்பத்தினருக்கு நான் இஸ்லாத்தைப் பற்றி கூறி நல்வழிப் படுத்துகிறேனோ இல்லையோ, இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!

எனது இல்லத்தில் இஸ்லாத்திற்கு மாறான செயல்கள் நடப்பதைக் கண்டும் காணாமல் இருந்து விடுகிறேன், இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!

மறுமை நாளைக்காக நான் எதை சேர்த்து வைத்திருக்கிறேன் என்று எண்ணிப் பார்க்க இந்த அவசர கால உலகத்தில் எங்கே முடிகிறது இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!

ஐந்து வேளைத் தொழுவது கடமை என்பது எனக்குத் தெரியும். ஆனால் என் வேலைப் பளுவினால் என்னால் தொழமுடியவில்லை, இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!

ரமலானில் நோன்பு வைப்பது கட்டாயம் என்பது சிறுபிள்ளைக்கும் தெரியும். இருப்பினும் பசி தாகம் சமாளிக்க.. நோன்பு வைக்க என்னால் முடியவில்லை, இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!

என் தொழிலில் பணம் கொட்டோ கொட்டு என்று கொட்டுகிறது. எனினும் கணக்குப் பார்த்து ஜகாத் கொடுத்திட மனம் இடம் தரவில்லை, இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!

என் வாழ்நாள் முழுவதும் ஓடி ஓடி உழைத்து ஓரளவு என் குடும்பத்திற்காக உழைத்து சேர்த்து ஓய்ந்து விட்டேன். இப்போது ஹஜ் செல்லும் அளவுக்கு என் உடலில் தெம்பு இல்லை இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!

வீட்டில் அபிவிருத்தி வேண்டி மவ்லீது ராத்தீபுகளை புது புது மெட்டுகளில் ஓதி இறையருள் பெற முயற்சிக்கிறேன். இதெல்லாம் தவறு என்று உள்மனம் கூறுகிறது, இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!

உன்னையே வணங்குகிறோம், உன்னிடமே உதவி கோருகிறோம்! என்று தொழுகையில் ஓதிவிட்டு அவ்லியாக்கள், பெரியார்களிடம் உதவி தேடுவது என் இரத்தத்தில் ஊறிப்போய்விட்டது, இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!

என் நாட்டம் நிறைவேற சலவாத்துன்னாறியா 4444 தடவை ஓதி துஆ கேட்கிறேன். இது குர்ஆன்-ஹதீஸில் இல்லை என்றாலும் என் மன ஆறுதலுக்காக, அபிவிருத்திக்காக இதை ஓதுவதற்கு ஏற்பாடு செய்கிறேன். இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!

பால்கிதாப்-பில்லி-சூனியம்-ஏவல்-தகடு-தட்டு-தாயத்து-பேய்-பிசாசு-ஆவி எல்லாம் நம்புகிறேன், இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!

புனை குறுக்கே செலவது, பல்லி தலையிலே விழுவது, ஆந்தை அலருவது, காகம் கரைவது, ஸஃபர் பீடை மாதம்-கெட்ட சகுனம் என எல்லாம் பார்த்து பார்த்து ஒவ்வொரு வேலையும் செய்கிறேன், இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!

பலர் பாராட்ட கத்னா-பூப்புனித நீராட்டு விழாவை விமரிசையாக நான் நடத்துகிறேன், இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!

புதுமனை புகுவிழாவிற்கு பால் காய்ச்சி விழா நடத்துகிறேன். குழந்தைக்கு தர்காவில் சென்று முடி இறக்கி மொட்டை போடுகிறேன். அவ்லியா சன்னிதானத்தில் ஆடு, சேவல் பலி தருகிறேன், இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!

என் அம்மாவின் கடைசி ஆசைக்காகத்தான் மஹர் கொடுத்து மணம் புரியாமல் வரதட்சணை வாங்கிக் கொண்டு திருமணம் செய்தேன். என் மனைவியின் ஆசைக்காகத்தான் சுன்னத்தான தாடியை சிரைத்துவிட்டேன், இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!

என் தந்தையின் வற்புறுத்தலால் என் மகன் திருமணத்தை மேள தாளத்துடன் யானை ஊர்வலத்துடன் மிக ஆடம்பரத்துடன் நடத்துகிறேன், இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!

வட்டி வாங்கக்கூடாது என்று வான் மறைக்கூறினாலும் கூட என் தொழில் வளர்ச்சிக்காக குறைந்த வட்டியில் வீடுகட்ட, கடை ஆரம்பிக்க, பைக் சவாரிக்காக வட்டி வாங்க வேண்டிய நிர்பந்தம். என்ன செய்வது? இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!

லாட்டரி சூதாட்டம்தான். அரசு அதனை தடை செய்திருந்தாலும் என்ன? நான் வெளி மாநில லாட்டரி சீட்டுகளை வாங்கி மறைத்து விற்பனை செய்து வருகிறேன், இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!

குடி குடியைக் கெடுக்கும்! மது ஹராம்தான், ஆனால் எனக்கு டாஸ்மார்க் கம்பெனியில்தான் வேலை கிடைத்தது. கைநிரைய சம்பாதிக்கிறேன், இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!

சினிமா பார்க்கக் கூடாதாம்! இந்த காலத்தில் நடக்கக்கூடிய காரியமா என்ன? பேரும் புகழும் பேரின்பமும் பெற்றுத் தரும் கனவுத் தொழிற்சாலையல்லவா அது! பாம்பு மட்டும்தான் படம் எடுக்குமா? மக்கள் பாராட்டும் விதமாக நான் கூட படம் எடுக்கிறேன், இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!

அளவு நிலுவையில் மோசடி கூடாதாம். வியாபாரத்தில் பொய் கூடாதாம். (பரக்கத்) இறையருள் கிடைக்காதாம். பொய் சொல்லாமல், மோசடி செய்யாமல் எப்படி விரைவில் பணக்காரன் ஆவதாம்? இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!

ஒரு சாண் நிலம் ஆக்கிரமிப்பு செய்தாலும் மறுமையில் ஒரு பூமி அளவு நிலத்தை நான் சுமக்க வேண்டுமாம். பலரின் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்த, அந்த நிலத்தை திரும்பக் கொடுத்து விட்டு என் பிள்ளைகளுக்கு எதைக் கொடுத்துவிட்டுப் போவதாம்? இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!

மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை கூடாதாம். பிறகு எதற்கு உலகத்தில் வாழ்வதாம்? இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!

என் குடும்பத்தில் என் நான்கு பிள்ளைகள், நான்கு மத்ஹப்களில் இருக்கின்றனர். நானும் என் தம்பிகளும் எல்லா அரசியல் அமைப்பிலும் அங்கம் வகிக்கிறோம், இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!

கடவுள், பாவம், புண்ணியம், நீதி, நியாயம், உண்மை என்கிறவற்றில் நம்பிக்கை கிடையாது. ஏதோ உலகத்திலே பிறந்துட்டோம். முளைக்கிற செடி வளர்ந்து மரமாகிற மாதிரி நாமும் வளர்ந்துட்டோம். ஏதோ வாழந்துட்டு இருக்கிறோம். ஊரோடு இணைந்து போகத்தானே வேண்டும். இஸ்லாமிய அடிச்சுவட்டில் இக்காலத்தில் வாழ்ந்தால் உலகம் நகைக்காதா? இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!

(அல்ஜன்னத்) ஆசிரியர்: போதும்! போதும்!! கொஞ்சம் இடம் கொடுத்தா, பக்கம் பக்கமாக மானம்-விமானம் ஏற்றிடுவீங்க போலிருக்கே..?.

ரேசன் கார்டிலும், வாக்காளர் அட்டையிலும், பள்ளி கல்லூரி சான்றிதழ்களிலும் மட்டுமே முஸ்லிமாக வாழ்பவர்களே! சிந்தியுங்கள். நமது வாழ்வும். மரணமும் தூய இஸ்லாத்தின் அடிப்படையில் மட்டுமே அமைந்திட வேண்டும் என்பதை உள்ளத்தில் பதித்துக் கொள்ளுங்கள்.

உணர்வாய் உன்னை

உங்கள் கணக்குகள் கேட்கப்படுமுன் நீங்களே உங்கள் சரிபார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் செயல்கள் எடை போடப்படுமுன் நீங்களே எடை போட்டுப் பாருங்கள். உமர் இப்னு கத்தாப் (ரலி).

இது ஒரு சுய மதிப்பீட்டுப் படிவம். நிகழ்காலத்தில் உங்கள் வாழ்க்கையின் பல பகுதிகளையும் மதிப்பீடு செய்து, உங்கள் திசைகளை மாற்றிக்கொள்வதற்கும், இன்னும் மேன்மைப்படுத்திக் கொள்வதற்கும் உதவும். இன்ஷா அல்லாஹ்..

பகுதி ஒன்று:

அல்லாஹ்வுடன் உங்களுடைய தனிப்பட்ட உறவு:

1. சந்தோஷமான, மகிழ்ச்சியான நேரங்களில் எத்தனை முறை அல்லாஹ்வை நினைவு கூர்ந்து அவனுக்கு நன்றி செலுத்தினீர்கள்?

2. இவ்வாண்டு, நீங்கள் பெற்ற கல்வியினாலும், செயல்பாடுகளினாலும் அல்லாஹ்வைப் பற்றிய ஞானமும் அவனுடன் உங்களுக்குள்ள கடமையுணர்ச்சியும் ஆழமானதா?

3. அல்லாஹ்வுடன் உள்ள தொடர்புகளில் சோம்பேறித்தனமாக இருந்தீர்களா?

4. உங்களுக்கு ஏதாவது தேவை இருந்த சமயம் தவிர, எத்தனை முறை அல்லாஹ்வுடன் துவா மூலம் பேசினீர்கள்?

5. எத்தனை முறை அல்லாஹ்வுடைய வழிகாட்டலை கேட்டிருக்கிறீர்கள்?

6. கவலை, தேவை, சிரமம் போன்ற சமயங்களில் எத்தனை முறை அல்லாஹ்விடம் கையேந்தியிருக்கிறீர்கள்?

7. அல்லாஹ்வின் நினைவையும், அவனுடனுள்ள உங்களுடைய கடமையுணர்ச்சியையும் அதிகரிப்பதற்கு தினசரி, வாராந்திர அடிப்படையில் நீங்கள் என்ன செய்யலாம்?

8. அல்லாஹ்வை எந்நேரமும் நினைவில் நிறுத்த, குர்ஆன், நபிமொழிகளிலுள்ள துவாக்களை எப்படி மனப்பாடம் செய்யலாம்?

9. அல்லாஹ்வுடன் தொடர்பு கொள்ளும்படி சகமனிதர்களை அழைத்திருக்கிறீர்களா?

உங்களுடைய இஸ்லாமிய அறிவு:

1. உங்களுடைய வாழ்நாட்களில் தினமும் குர்ஆனின் ஒரு வசனங்களையாவது பொருளறிந்து படித்திருக்கிறீர்களா? இல்லையெனில் இன்றிலிருந்து முயற்சி எடுப்பீர்களா?

2. இஸ்லாமிய கல்வி வட்டம் அல்லது வகுப்புகளுக்குச் சென்றீர்களா? இல்லையென்றால், அங்கு செல்லத் தடையாக இருப்பது எது..? எப்படி அந்தத் தடையை நீக்கலாம்?

3. இஸ்லாமிய அறிவைப் பெறுவதற்காக, மாநாடுகளுக்கோ, கருத்தரங்குகளுக்கோ பயணம் செய்தீர்களா?

4. கடந்த வருடத்தில் நீங்கள் கற்ற இஸ்லாத்தைப்பற்றி நீங்கள் முன்பு அறிந்திராத 10 விஷயங்கள் எவை? அவற்றில் நீங்கள் நடைமுறையில் செயல்பாட்டிற்குக் கொண்டு வந்தவை எவை?

5. நீங்கள் அல்லாஹ்விற்காக மட்டுமே அறிவைத் தேடினீர்களா அல்லது வேறு எதாவது காரணத்திற்காகவா?

6. இஸ்லாத்தைப் பற்றி நீங்கள் அறிந்திராத எந்த 10 விஷயங்கள் பற்றி அடுத்த ரமளானுக்குள் அறிந்து கொள்ள விரும்புகிறீர்கள்?

7. கடந்த வருடத்தில் சுமாராக எத்தனை இஸ்லாமிய புத்தங்கள் படித்தீர்கள்?

8. கடந்த வருடத்தில் சுமாராக எத்தனை இஸ்லாமிய வீடியோக்களை பார்த்தீர்கள்?

9. சுமாராக எத்தனை இஸ்லாமிய ஆடியோ கேசட்டுகள் கேட்டீர்கள்?

10. அறிவு பெறுவதற்கு உங்களுக்கு எது மிகவும் பொருத்தமாக இருக்கிறது? (கேட்டல், பார்த்தல் அல்லது படித்தல்)

11. உங்களைச் சுற்றியுள்ள மக்களைப் பற்றியும் அவர்களிடம் உள்ள மார்க்க ஞானம் பற்றியும் அறிந்திருக்கிறீர்களா? அவர்கள் அறியாமையில் இருப்பின் அவைகளை களைய ஏதாவது முயற்சி எடுத்தீர்களா.?

உங்களுடைய தொழுகை:

1. ஒரு நாளுக்கு ஐந்து முறை தொழுகிறீர்களா?

2. ஒரு நாளில் எந்தெந்த தொழுகைகளை ஜமாஅத்துடன் தொழுதீர்கள்?

3. பள்ளியிலோ பணியிலோ இருக்கும் போது தொழுகை நேரத்தில் தொழுதீர்களா, இல்லயென்றால், வீட்டிற்கு வந்தபின் அதற்காக ஈடு செய்தீர்களா?

4. தொழுகையை சரியான முறையில் நிறைவேற்றுகிறீர்களா? அல்லது நீங்கள் தொழுவது தான் சரியான முறை என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா?

5. உங்கள் தொழுகையில் மன ஓர்மையுடன் இருக்கிறீர்களா?

6. தொழுகையை ஆர்வத்துடனும், அன்புடனும், இறையச்சத்துடனும் எதிர்நோக்குகிறீர்களா அல்லது தயக்கத்துடனும், சோம்பேறித்தனத்துடனும், ஏதோ முடிந்தால் போதும் என்ற மனநிலையிலும் எதிர்நோக்குகிறீர்களா?

7. கடமையான (ஃபர்ள்) தொழுகையுடன், சுன்னத் தொழுகையையும் நிறைவேற்றுகிறீர்களா?

8. உங்கள் தொழுகையை எப்படி செம்மைப்படுத்தலாம்?

9. உங்கள் அடுத்த வீட்டுக்காரர்களுக்கும் உடன் வேலை செய்பவர்களுக்காவும் துவா செய்திருக்கிறீர்களா?

பகுதி இரண்டு:

உங்கள் குடும்பம்:

1. கடைசியாக எப்போது உங்கள் குடும்பத்திற்காக அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தினீர்கள்?

2. உங்கள் குடும்பத்துடன் உங்களுக்குள்ள உறவு அல்லாஹ்வின் சந்தோஷத்திற்காகவா?

3. ஒரு முஸ்லிமாக, உங்களுக்கு உங்கள் குடும்பத்தின் பால் உள்ள பொறுப்பை அறிந்திருக்கிறீhகளா?

4. ஒரு தாய்-தந்தை, கணவன்-மனைவி, சகோதரன்-சகோதரி, மகன்-மகள் என்ற முறையில் உங்கள் பொறுப்புக்களை அறிந்திருக்கிறீர்களா?

5. ஒரு தாய்-தந்தை, கணவன்-மனைவி, சகோதரன்-சகோதரி, மகன்-மகள் என்ற முறையில் உங்கள் உரிமைகளை அறிந்திருக்கிறீர்களா?

உங்கள் பெற்றோர்:

1. உங்கள் பெற்றோருடன் உங்கள் உறவு எப்படி இருக்கிறது?

2. அவர்களுடன் வசிக்கும் பட்சத்தில் தினமும் அர்த்தமள்ள உரையாடல் எதாவது உங்களுக்கிடையில் நடக்கிறதா?

3. களைய வேண்டிய வெறுப்புகள் எதையாவது வளர்த்துக் கொண்டிருக்கிறீர்களா?

4. அவர்களிடம் நீங்கள் மரியாதையுடன் நடந்து கொள்கிறீர்களா?

5. கடந்த ஆண்டு, அவர்களை அல்லாஹ்விடம் நெருங்கச் செய்வதற்காக நீங்கள் செய்த 5 காரியங்கள் எவை?

6. உங்கள் பெற்றோருக்கு பணிவிடை செய்திருக்கிறீர்களா?

7. அவர்கள் தொலைவில் வசிப்பவர்களாக இருந்தால், அவர்களை அடிக்கடி போய்ப் பார்ப்பதோ, பேசுவதோ உண்டா?

8. பெருநாள் தினங்களில் அவர்களுக்கு பரிசுப் பொருட்கள் கொடுத்து அவர்களுடன் நெருக்கத்தை ஏற்படுத்த முயன்றதுண்டா?

9. அவர்கள் உயிரோடு இல்லாவிட்டால், அவர்களுக்காக எப்போது பிரார்த்தனை செய்தீர்கள்?

10. அவர்களுக்காக சமீபத்தில் எப்போது தர்மம் செய்தீர்கள்?

உங்கள் வாழ்க்கைத் துணை:

1. உங்கள் வாழ்க்கைத் துணையுடன் உங்கள் உறவு எப்படி இருக்கிறது?

2. தினசரி அடிப்படையில் அவர்களுடன் அடிக்கடி அர்த்தமுள்ள உரையாடல்களில் ஈடுபடுகிறீர்களா?

3. இஸ்லாமிய வகுப்புகளுக்குத் தொடர்ச்சியாக இருவரும் சேர்ந்து செல்வதன் மூலம் இஸ்லாத்தைப் பற்றி அறிந்து கொண்டீர்களா?

4. நீங்கள் இருவராகவும், குடும்பமாகவும் இஸ்லாத்தை உங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாக ஆக்குவதற்கு எப்படி முயன்றீர்கள்?

5. பேசிக் தீர்த்துக் கொள்ள வேண்டிய மௌனமான வருத்தங்கள் ஏதாவது மனதளவில் இருக்கிறதா?

6. கடந்த வருடத்தில் எத்தனை முறை நீங்கள் இருவரும் சேர்ந்து மறுமை சிந்தனை குறித்து பேசியிருக்கிறீர்கள்?

7. உங்கள் உறவில் சொல், உணர்வு அல்லது உடல் ரீதியாக செய்யப்பட்ட கொடுமை அல்லது அநீதி ஏதாவது உள்ளதா? அப்படியிருந்தால், ஏன் அது நடந்தது? அதற்கு என்ன செய்யலாம்?

8. கடந்த வருடத்தில் உங்கள் உறவினால் அல்லாஹ்வின் மேலும், இஸ்லாத்தின் மேலும் உள்ள ஈமான் வளர்ந்திருக்கிறதா?

9. உங்கள் வாழ்க்கைத் துணையின் இடத்தில் நீங்கள் இருந்தால் எப்படி உணர்வீர்கள்?

உங்கள் பிள்ளைகள்:

1. உங்கள் பிள்ளைகளுடன் உங்கள் உறவு எப்படி இருக்கிறது?

2. அவர்களுடைய பள்ளி, பகுதி நேர, சமூக நடவடிக்கைகள், இவற்றில் என்ன நடக்கிறது என்று தெரியுமா?

3. அவர்களுடைய நண்பர்கள் யார் என்று தெரியுமா?

4. தினசரி அடிப்படையில் அவர்களுடன் அடிக்கடி அர்த்தமுள்ள உரையாடல்களில் ஈடுபடுகிறீர்களா?

5. அவர்களுடன் ஓய்வு நேரத்தைக் கழிக்கிறீர்களா?

6. அல்லாஹ்வுடன் பிள்ளைகளுக்கு நெருக்கத்தை ஏற்படுத்த நீங்கள் எடுத்த ஏதாவது 5 செயல்கள்.

7. உங்கள் உறவில் சொல், உணர்வு அல்லது உடல் ரீதியாக செய்யப்பட்ட கொடுமை அல்லது அநீதி ஏதாவது உள்ளதா? அப்படியிருந்தால், ஏன் அது நடந்தது? அதற்கு என்ன செய்யலாம்?

8. அவர்களுக்கு முன்னால் வாழும் இஸ்லாமிய எடுத்துக்காட்டாக நீங்கள் இருந்திருக்கிறீர்களா?

9. எதன் மூலம் அவர்களுடன் நீங்கள் அதிக நேரம் செலவழிக்கலாம்?

10. அவர்கள் எப்படிப்பட்ட சூழ்நிலைகளில் வளர்கிறார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா?

11. அவர்களுக்குப் பிடித்த தொலைக்காட்சி நிகழ்ச்சி, எழுத்தாளர்கள், வீடியோ விளையாட்டுகள், விளையாட்டுப்பொருட்கள் போன்றவை என்ன என்று தெரியுமா?

12. எத்தனை முறை பள்ளிவாயிலில் ஜும்மா தொழுதிருக்கிறார்கள்?

13. உங்களைப் பற்றிய மதிப்பீடு அவர்களிடம் எப்படி இருக்கிறது என்று நினைக்கிறீர்கள்?

14. அவர்கள் எதாவது சொல்ல நினைத்தால் உங்களிடம் பேசுவார்களா? அல்லது உங்கள் துணைவருடன் பேசுவார்களா?

15. உங்கள் உறவினர்களுடன் (உடன் பிறப்புகள், மற்றவர்கள்) உங்கள் உறவு எப்படி இருக்கிறது?

16. எத்தனை முறை அவர்களுடன் தொடர்பு கொள்கிறீர்கள்?

17. அவர்களுக்கு பெருநாள் வாழ்த்து-பரிசு ஏதாவது கொடுத்தீர்களா அல்லது பெருநாளுக்கு தொலைபேசியிலாவது பேசினீர்களா?

18. அவர்கள் அருகில் வசிக்கவில்லை என்றால் வருடத்திற்கு ஒருமுறையாவது அவர்களைப் போய்ப் பார்க்கிறீர்களா?

19. தீர்க்க வேண்டிய மனஸ்தாபங்கள் ஏதாவது இருக்கிறதா?

20. அவர்கள் அல்லாஹ்வை நெருங்க ஏதாவது முயற்சி செய்தீர்களா?

21. அவர்களுடைய ஹலாலான தேவைகளை (அதாவது பண உதவி) நிறைவேற்ற உதவியிருக்கிறீர்களா?

22. உங்களுடைய பிள்ளைகள் உங்கள் உடன்பிறப்புகளை அறிவார்களா?

பகுதி மூன்று:

உங்கள் செல்வம்:

1. கடந்த வருடத்தில் உங்கள் செல்வத்தைப் பெருக்கியிருக்கிறீர்களா?

2. அதற்காக அல்லாஹ்வுக்கு எப்படி நன்றி செலுத்தினீர்கள்?

3. உங்கள் வருவாய் (வேலை) ஹலாலானதா? உங்களுக்கு நிச்சயமாகத் தெரியாவிட்டால் யாரிடம் அதைப்பற்றி ஆலோசிக்கலாம்?

4. உங்களுடைய ஜகாத்தைக் கொடுத்துவிட்டீர்களா?

5. எத்தனை முறை, எவ்வளவு தர்மத்திற்காக செலவழித்திருக்கிறீர்கள்?

6. எவ்வகைப் பொருட்கள், மக்கள், காரணங்களுக்காக இவ்வருடம் செலவழித்திருக்கிறீர்கள்?

7. உங்கள் செலவுகளுக்கு கணக்கு வைத்திருக்கிறீர்களா?

8. செலவுத்திட்டம் வைத்திருக்கிறீர்களா?

9. உங்கள் கடன் அதிகரித்திருக்கிறதா? குறைந்திருக்கிறதா?

10. வட்டி வாங்குவது அல்லது கொடுப்பதிலிருந்து முற்றிலுமாக விலகி விட்டீர்களா?

11. அடுத்த வருடம் எந்த விஷயங்களுக்காக தர்மம் கொடுப்பதை முதன்மைப்படுத்தியிருக்கிறீர்கள்?


பகுதி நான்கு:

உங்கள் ஆரோக்கியம்:

1. உங்கள் ஆரோக்கியத்திற்காக அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தினீர்களா?

2. உடற்பயிற்சி ஒழுங்காக செய்கிறீர்களா? இல்லையென்றால் ஏன்?

3. ஒழுங்காக உண்ணுகிறீர்களா?

4. சமச்சீர் உணவு உண்ணுகிறீர்களா?

5. அல்லாஹ்வை வணங்குவதற்காக உபரித் தொழுகைகளை உடலும் உள்ளமும் ஒன்றுபட தொழுதிருக்கிறீர்களா?

6. உங்கள் உடல்நிலையை எப்படி கவனித்துக் கொள்வது என்று அறிந்திருக்கிறீர்களா?

7. உங்கள் குடும்பத்தினரையும், உறவினர்களiயும் அதே போல் உடலைக் கவனித்துக் கொள்ள உற்சாகப்படுத்தியுள்ளீர்களா?

8. எப்போது கடைசியாக பொது உடற்பரிசோதனை செய்து கொண்டீர்கள்?

பகுதி ஐந்து:

உங்கள் தொழில்:

1. உங்கள் வேலையில் திசையையும் கவனத்தையும் தவற விட்டு விட்டீர்களா?

2. உங்கள் வேலை உங்களுக்குப் பிடித்திருக்கிறதா?

3. உங்கள் வேலை இஸ்லாம் அனுமதிக்கக் கூடியதாக இருக்கிறதா?

4. இல்லையென்றால், எவ்வித வேலை மாற்றம் உங்களுக்கு ஹலாலான வருவாயைத்தருவதுடன், உங்கள் திறமைகளை அல்லாஹ்விற்காகப் பயன்படுத்த உதவும்?

5. இதைப் பற்றி ஒரு தகுதியான மனிதரிடம் கலந்தாலோசித்திருக்கிறீர்களா?

6. உங்கள் தொழில் ஹலாலானதாக இருந்தால், அதன் திறனையும், கவனத்தையும் முன்னேற்ற முயன்றிருக்கறீர்களா?

7. அல்லாஹ்விடம் உங்களுக்கு உள்ள உறவை முன்னேற்ற, உம்மத்திற்கும், சமுதாயத்திற்கும் நன்மை புரிய, என்னென்ன புது வழிகள் மூலம் உங்கள் தொழிலை உபயோகிக்கலாம்?

8. தொழில் அல்லாஹ்வின் பொருத்தத்தின் பிரகாரம் இருக்க வேண்டும் என்ற விஷயத்தை பிறருக்கும் எத்தி வைத்துள்ளீர்களா..?

பகுதி ஆறு:

உங்கள் கல்வி:

1. உங்கள் தற்போதைய தகுதிகள் எவை?

2. அவை உங்களுக்கு திருப்தியைத் தருகின்றனவா?

3. இல்லையென்றால், எந்த அளவு கல்வியை அடைய விரும்புகிறீர்கள்?

4. உங்கள் கல்வித்தகுதியை மேம்படுத்த என்னென்ன ஹலாலான வழிகள் (வட்டியில்லாக் கடன்) உள்ளன?

5. மாணவராக இருந்தால், உங்கள் கல்வி உங்களை அல்லாஹ்விடம் நெருக்கமாகக் கொண்டு செல்லுமா?

6. எவ்விதத்தில் உங்கள் கல்வி முஸ்லிம்களுக்கும், பொதுவாக சமுதாயத்திற்கும் உபயோகமாக இருக்கும்?

7. உற்சாகத்தோடும், முழு ஈடுபாட்டோடும் படித்திருக்கிறீர்களா?

8. உங்கள் கல்வித் தகுதியை முன்னேற்ற, எதாவது கூடுதலான திட்டங்கள் அல்லது வகுப்புகளில் சேர வேண்டுமா? (மேற்கண்ட கல்வியை உலகக் கல்வி மார்க்க கல்வி என்று பிரிக்க வேண்டாம். இரண்டும் கல்வி தான்).

பகுதி ஏழு:

ங்கள் நேரம்:

1. இவ்வருடம் எதில் அதிக நேரம் செலவழித்தீர்கள்?

2. அதில் நீங்கள் திருப்தியாக இருக்கிறீர்களா?

3. இல்லையென்றால், எதில் உங்கள் பெரும்பாலான நேரத்தைச் செலவிட விரும்பியிருப்பீர்கள்?

4. அதை செயல்படுத்த என்னென்ன மாற்றங்களைச் செய்ய வேண்டும்?

5. உங்களிடம் சரியான கால நிர்வாகத் திட்டத் திறமைகள் உள்ளனவா? இல்லையென்றால், அதற்கு நீங்கள் என்ன செய்யலாம்?

6. அதைப் பற்றிய புத்தகம் படிக்க இயலுமா?

7. அல்லது காலநிர்வாகத் திட்டக் கல்வி பயில சிறிது பணம் செலவழிக்க முடியுமா?

8. உங்கள் காலத்தைத் திட்டமிடுகிறீர்களா?

9. உங்கள் வாழ்வில் சரியான முறையில் நேரத்தைச் செலவழித்ததற்கு உதராணமாக ஒரு நாளைக் குறிப்பிட முடியுமா?

10. இவ்வருடம், உங்களுக்கு சராசரியாக ஒரு வாரத்தில் எவ்வளவு ஓய்வு நேரம் கிடைத்தது?

11. தற்போது உங்களுக்கு எத்தனை மணி நேரம் ஓய்வாகக் கிடைக்கிறது?

12. உங்கள் ஓய்வு நேரத்தை இன்னும் செம்மையாக எப்படி செலவழிக்கலாம்?

13. அல்லாஹ்வுடன் நெருக்கத்தை அதிகரிக்க உங்கள் ஓய்வு நேரம் எப்படி உதவும்?

14. தொலைக்காட்சி எத்தனை நேரம் பார்க்கிறீர்கள்?

15. அதிக நேரம் தொலைக்காட்சியின் முன்னால் செலவழிக்கிறீர்களா? அல்லது உங்கள் குடும்பத்தினருடன் பேசுவதில் செலவிடுகிறீர்களா?

16. தொலைக்காட்சியின் காணும் காட்சிகள் இஸ்லாத்திற்கு விரோதமாக உள்ளதா..? பிரயோஜனமாக உள்ளதா..?

பகுதி எட்டு:

உங்கள் இஸ்லாமியப் பணி:

1. நற்கரியங்களுக்காக எத்தனை நேரம் ஒதுக்குகிறீர்கள்?

2. உங்கள் நேரத்தை பள்ளிவாசலுக்காகவோ முஸ்லிம் கல்விக் கூடத்திற்காகவோ செலவழித்திருக்கிறீர்களா?

3. களப்பணியில் ஈடுபட்டிருக்கிறீர்களா?

4. இஸ்லாமிய செய்தியை மற்றவர்களிடம் எத்தி வைப்பதற்கு எத்தனை நேரம் செலவழித்திருக்கிறீர்கள்?

5. இஸ்லாத்திலிருந்து வெகு தூரத்தில் உள்ள உறவினர்கள், நண்பர்களைப் போய்ச் சந்தித்தீர்களா?

6. நீங்களும் உங்கள் அக்கம் பக்கத்தினரும் ஒருவர் மற்றவருடைய இன்ப, துன்பங்களில் பங்கேற்றீர்களா?

7. ஒரு முஸ்லிம் நிறுவனம் உபயோகிக்கக் கூடிய திறமைகள் எவற்றையாவது வளர்த்துள்ளீர்களா?

Sunday, June 13, 2010

இஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட தீமைகள்!

தூய்மையான இஸ்லாத்தில் மார்க்கம் என்ற பெயரிலே பல போலி மார்க்க அறிஞர்கள் இணைவைப்பையும் புரோகிதத்தையும் புகுத்தினர். அதை இன்றும் சுன்னத்தை பின்பற்றுகிறோம் என்று போலி கூச்சல் போடுபவர்கள் நியாயப் படுத்தியே வருகின்றனர். அல்லாஹ்வும் அவனது தூதரும் மார்க்கத்தை தெளிவாக எத்தி வைத்துவிட்ட நிலையில் இவர்கள் எந்த இலாபத்திற்காக மார்க்கத்தை வளைக்கின்றனர் என்று தெரியவில்லை. மேலும் இவர்கள் போன்றவர்கள் அல்லாஹ்வின் திருப்தியை விட வேற ஏதோ ஒன்றின் மீது அதிக நாட்டம் கொண்டுள்ளனரோ என்ற சந்தேகம் வருகிறது.

‎இஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட தீமைகள் பற்றி அல்குர்-ஆனிலும் ஹதீஸ்களிலும் பல இடங்களில் வலியுறுத்தப்படுகிறது. ஆனால் இஸ்லாமிய சமுதாயத்தில் அத்தகைய தீமைகள் சர்வ சாதாரணமாக மலிந்து கிடப்பதை காணலாம். இன்று பெரும்பாலான மனிதர்கள் சிறிது வசதி வந்தவுடனேயே கர்வத்துடனும் மார்க்கத்தின் செயல்பாடுகளில் அலட்சியத்துடனும் தங்களை ஏதோ வானத்தில் இருந்து குதித்ததுபோல் காட்டிக் கொள்கின்றனர். இவர்கள் ஏதோ ஆயிரம் வருடங்கள் இந்த உலகத்தில் வாழப் போவது போலவும் தங்களிடம் இருக்கும் இந்த செல்வம் நிலையாக இருக்கும் என்றும் ஒருவித மயக்கத்தில் வாழ்ந்து வருகின்றனர். அத்தகைய சிந்தனை உடைய முஸ்லிம்கள் தாங்கள் நிலையை மாற்றி நிலையில்லாத இந்த உலக வாழ்கையை விட நிலையான மறுமை வாழ்கையே சிறந்தது என்பதை தங்களுடைய மனதில் நிறுத்த வேண்டும். மேலும் இஸ்லாத்தின் போதனைகளை மற்றவர்களிடம் பரப்ப தங்களால் ஆன முயற்சியை மேற்கொள்ள வேண்டும்.

1) ஷிர்க் எனும் இணைவைத்தல்!‎
‎“நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கமாட்டான்; இதைத்தவிர, (மற்ற) ‎எதையும் தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான்; யார் அல்லாஹ்வுக்கு இணைவைக்கிறார்களோ ‎அவர்கள் நிச்சயமாக மிகவும் பெரிய பாவத்தையே கற்பனை செய்கின்றார்கள்” (அல்-குர்ஆன் 4:48)‎


‎2) சூன்யம், ஜோதிடம் மற்றும் குறிபார்த்தல்!‎

‎“யாராவது குறி சொல்பவனிடம் சென்று அவன் கூறுவதை உண்மை என்று நம்பியவர் ‎முஹம்மது(ஸல்) அவர்களுக்கு அருளப்பட்டதை நிராகரித்தவர் ஆவார்” அறிவிப்பவர்: ‎அபூஹுரைரா (ரலி), ஆதாரம் அபூதாவுத்.‎

‎“குறி சொல்பவனும் அதைக் கேட்பவனும், எதிர்காலத்தை கணித்துக் கூறுபவனும் அதைக் ‎கேட்பவனும், சூன்யம் செய்பவனும், அதைச் செய்யச் சொன்னவனும் நம்மைச் சார்ந்தவன் ‎இல்லை” என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அல் பஸ்ஸார் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.‎

‎3) கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் நன்மை செய்வதாக நம்புதல்!‎

நபி (ஸல்) அவர்கள் ஓர் இரவு மழை பொழிந்த பின் ஹுதைபிய்யா எனுமிடத்தில் எங்களுக்கு ‎ஸுப்ஹுத் தொழுகை நடத்தினார்கள். தொழுது முடித்ததும் மக்களை நோக்கி ‘உங்களுடைய ‎இறைவன் என்ன கூறினான் என்று அறிவீர்களா?’ என்று கேட்டார்கள். அதற்கு மக்கள் ‎‎‘அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர்கள்’ என்றனர். அதற்கு நபி (ஸல்) ‎அவர்கள், ‘என்னுடைய அடியார்களில் என்னை நம்பியவர்களும் என்னை நிராகரிப்பவர்களும் ‎இருக்கின்றனர். அல்லாஹ்வின் அருளால், அவனுடைய கருணையால் எங்களுக்கு மழை ‎பொழிந்தது என்று கூறுகிறவரே என்னை நம்பியவர். நட்சத்திரங்களை நிராகரித்தவர். இன்னின்ன ‎நட்சத்திரங்களால் எங்களுக்கு மழை பொழிந்தது என்று கூறுகிறவரே என்னை நிராகரித்து ‎நட்சத்திரங்களை நம்பியவர்” என்று அல்லாஹ் கூறினான்” எனக் குறிப்பிட்டார்கள். அறிவிப்பவர்: ‎ஸைத் இப்னு காலித் (ரலி), ஆதாரம்: புஹாரி

4) பாதுகாப்பு வேண்டி தாயத்து, கயிறு, வளையம் அணிதல்!‎
நபி (ஸல்) அவர்களுடன் சில பயணங்களில் நான் சென்றிருந்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் ‎ஒரு தூதுவரை அனுப்பி ஒட்டகக் கழுத்தில் (கண் திருஷ்டிக்காகக் கட்டப்பட்டு) உள்ள வில் ‎கயிற்றினாலான மாலையை அல்லது (வில் கயிற்றினாலான மாலையென குறிப்பிடாது ‎பொதுவான) எந்த மாலையையும் துண்டிக்காமல் நீர் விட்டு விட வேண்டாம் என்று நபி (ஸல்) ‎அவர்கள் அம்மனிதருக்கு கூறியதாக அபூபஷீர் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள். (புகாரி) ‎

‎(ஷிர்க்கான வார்த்தைகளைக் கூறி) மந்திரித்தல், தாயத்துகள், (ஏலஸ்கள் கட்டுதல். தாவீசுகள்) ‎திவலாக்கள் ஆகிய அனைத்தும் ஷிர்க்காகும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் ‎கேட்டேன் என அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (அஹ்மத், ‎அபூதாவூத்)‎

5) துர்ச்சகுனம் பார்த்தல்!‎
‎(இஸ்லாத்தில்) தொற்றுநோய் என்பதில்லை; துர்ச்சகுனம் பார்ப்பது கூடாது; ஆந்தை சாஸ்திரம் ‎பார்ப்பதும் கூடாது; சஃபர் என்பதும் கிடையாது; நட்சத்திர சகுனம் பார்ப்பதும் கூடாது; கொள்ளி ‎வாய்ப் பிசாசுமில்லை’ என நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி ‎வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூஹூரைரா - (ரலி) நூல்: புகாரீ, முஸ்லிம்

எவர் ஒருவருடைய (அவர்பார்த்த) சகுனம் அவருடைய தேவையை (நிறைவேற்றி முடிப்பதை) ‎விட்டும் திருப்பி விடுகிறதோ அவர் அல்லாஹ்வுக்கு இணைக் கற்பித்து விட்டார்’ என நபி தூதர் ‎ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அதனுடைய பரிகாரமென்ன? ‎என்று (நபித் தோழர்களான) அவாகள் கேட்டார்கள் அ(தற்கு நபிய)வர்கள் ‎

அல்லாஹூம்ம லா கைர இல்லா கைருக்க, வலா தைர இல்லா தைருக்க, வலா இலாஹ இல்லா ‎கைருக்க.‎

‎(பொருள்: யாஅல்லாஹ்! உன் நன்மையன்றி வேறு நன்மையில்லை உன் சகுனமின்றி வேறு ‎சகுனமில்லை உன்னையன்றி வணங்கப்படுவதற்கு தகுதியானவன் வேறில்லை) என நீர் ‎வுறுவதாகும் என்று கூறினார்கள். அறிவிப்பாளர்: ஃபள்லு இப்னு அப்பாஸ் - ரலி நூல்: அஹ்மது

6) முகஸ்துதி (பிறருக்கு காண்பிப்பதற்காக அமல் செய்தல்)‎
‎“நிச்சயமாக இந்நயவஞ்சகர்கள் அல்லாஹ்வை வஞ்சிக்க நினைக்கின்றனர்; ஆனால் அவன் ‎அவர்களை வஞ்சித்துவிடுவான்; தொழுகைக்கு அவர்கள் தயாராகும் பொழுது ‎சோம்பலுடையோராகவே நிற்கிறார்கள் - மனிதர்களுக்குத் (தங்களையும் தொழுகையாளியாக்கி) ‎காண்பிப்பதற்காக (நிற்கிறார்கள்); இன்னும், மிகச் சொற்ப அளவேயன்றி அவர்கள் அல்லாஹ்வை ‎நினைவு கூர்வதில்லை” (அல்-குர்ஆன் 4:142)‎

‎‘என்னிடம் தஜ்ஜாலை விடவும் (அவனால் உங்களுக்கு ஏற்படும் தீமையை விடவும்) உங்கள் மீது ‎அதிகம் பயப்படத்தக்க ஒன்றை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? என அல்லாஹ்வின் தூதர் ‎ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் வினவினார்கள். ஆம்! தெரிவியுங்கள் என ‎‎(தோழர்களான)அவர்கள் கூறினார்கள். அ(தற்கு நபிய)வர்கள், (நான் பெரிதும் உங்கள் மீது ‎பயப்படும் தீங்கு) மறைமுக ஷிர்க்காகும் (அது யாதெனில்) ஒருவர் தொழுகையை நிறைவேற்ற ‎நிற்கிறார். தன்னை மற்றவர் பார்ப்பதை கண்டு தனது தொழுகையை (நீட்டி நிறுத்தி) ‎அழகுபடுத்துகிறார் (முகஸ்துதியான இதுவே மறைமுக ஷிர்க்காகும்) எனக் கூறினார்கள்.‎

7) காலத்தை ஏசுதல்!‎
காலத்தைத் திட்டுவதின் மூலம் மனிதர்கள் என்னை சங்கடப்படுத்திவிடுகிறார்கள் காலத்திற்குச் ‎சொந்தக்காரன் நானே! இரவையும் பகலையும் மாறிவரச் செய்பவனும் நானே என அல்லாஹ் ‎கூறியதாக நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: ‎அபூஹூரைரா - ரலி நூல்: புகாரி.‎

‎8.) அல்லாஹ் அல்லாதவருக்காக அறுத்துப்பலியிடுதல்!‎

‎‘அல்லாஹ் அல்லாதவருக்காக அறுத்தவரை அல்லாஹ் சபிப்பானாக’ அறிவிப்பவர் : அலி (ரலி), ‎ஆதாரம் : முஸ்லிம்.‎

9) கப்றுகளில் கட்டங்கள் எழுப்புதல்!‎
அவர்களில் நல்ல மனிதர் ஒருவர் வாழ்ந்து மரணித்து விடும் போது அவரது கப்ரில் ‎வணங்குமிடத்தை ஏற்படுத்தி விடுகின்றனர். இவாகளின் வடிவங்களையும் அதில் அமைத்து ‎விடுகின்றனர். கியாம நாளில் அல்லாஹ்விடத்தில் அவர்கள்தான் படைப்பினங்களில் மிகவும் ‎கெட்வர்கள் அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி), நூல் புகாரி மற்றும் முஸ்லிம்.‎

‎10) கப்றுகளுக்காக விழா நடத்துதல்!‎

எனது கப்ரை (கந்தூரி) விழாக்கள் நடக்கும் இடமாக ஆக்கிவிடாதீர்கள். உங்கள் வீடுகளையும் ‎கப்ருகளாக ஆக்கிவிடாதீர்கள். நீங்கள் எங்கிருந்த போதும் எனக்காக ஸலவாத்து சொல்லுங்கள். ‎அது என்னை வந்தடையும் அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), ஆதாரம்: அபூதாவுத்.‎

11) சமாதி வழிபாடு!‎
யஹுதிகளும், நஸராக்களும் தங்கள் நபிமார்களின் கப்ருகளை வணங்குமிடங்களாக ‎ஆக்கிக்கொண்டனர். அல்லாஹ் அவர்களைச் சபிப்பானாக அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல் ‎‎: முஸ்லிம்.‎

‎“அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களைப் போன்ற ‎அடிமைகளே!” (அல்-குர்ஆன் 7:194)‎

‎12) அல்லாஹ் அல்லாதவருக்காக அறுத்துப்பலியிடுதல்!‎

‎“உமது இறைவனைத் தொழுது அவனுக்காக அறுப்பீராக!” (அல்-குர்ஆன் 108:2)‎

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : “அல்லாஹ் அல்லாதவருக்காக அறுத்தவரை அல்லாஹ் ‎சபிப்பானாக!” அறிவிப்பவர் : அலி (ரலி), ஆதாரம் : முஸ்லிம்.‎

13) அல்லாஹ் அல்லாதவருக்காக நேர்ச்சை செய்தல்!‎
‎“இன்னும், செலவு வகையிலிருந்து நீங்கள் என்ன செலவு செய்தாலும், அல்லது நேர்ச்சைகளில் ‎எந்த நேர்ச்சை செய்தாலும் நிச்சயமாக அல்லாஹ் அதனை நன்கறிவான்; அன்றியும் ‎அக்கிரமக்காரர்களுக்கு உதவி செய்வோர் எவரும் இலர்” (அல்-குர்ஆன் 2:270)‎

‎“அல்லாஹ்வுக்கு வழிபடுவதை நேர்ச்சை செய்தவர், (அதை நிறைவேற்றி) அவனுக்கு ‎வழிபடுவாராக! அல்லாஹ்வுக்கு மாறுசெய்ய நேர்ச்சை செய்தவர்; (அவ்வாறு அதை நிறை ‎வேற்றி) அவனுக்கு மாறுசெய்ய வேண்டாம் என அல்லாஹ்வின் தூதர்; ‎ஸல்லல்லாஹூஅலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிப்பாளர்: ஆயிஷா - ‎ரலியல்லாஹூ அன்ஹு. ஆதாரம் : புகாரீ, அஹ்மது, நஸயீ, திர்மிதீ, இப்னுமாஜா

14) இறைவனல்லாத பிறரை (அவுலியா, இறைநேசர்கள் போன்றவர்களை) அழைத்து ‎உதவி தேடுதல்!‎
‎“கியாம நாள்வரை (அழைத்தாலும்) தனக்கு பதில் கொடுக்க மாட்டாத - அல்லாஹ் ‎அல்லாதவர்களை அழைப்பவர்களைவிட வழி கெட்டவர்கள் யார்? தங்களை அழைப்பதையே ‎அவர்கள் அறியமுடியாது” (அல்-குர்ஆன் 46:5)‎

‎“அல்லாஹ்வை விடுத்து அவனுக்கு இணையாக ஒருவரைப் பிரார்த்தித்த நிலையில் எவன் ‎இறந்து விடுகின்றானோ அவன் நரகில் நுழைவார் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‎கூறினார்கள்” அறிவிப்பவர் : இப்னு மஸ்வூத் (ரலி), ஆதாரம் : புகாரி.‎

15) அல்லாஹ் அல்லாதவர் ஹலாலை ஹராமாக்குவதையும் ஹராமை ஹலாலாக்கு ‎வதையும் ஏற்றுக்கொள்ளுதல்!‎
‎“(நபியே!) நீர் கூறும்: ‘அல்லாஹ் உங்களுக்கு இறக்கிவைத்த ஆகாரங்களை நீங்கள் ‎கவனித்தீர்களா? அவற்றில் சிலவற்றை ஹராமாகவும், சிலவற்றை ஹலாலாகவும் நீங்களே ‎ஆக்கிக் கொள்கிறீர்கள்; (இப்படித் தீர்மானித்துக்

கொள்ள) அல்லாஹ் உங்களுக்கு அனுமதி அளித்துள்ளானா? அல்லது அல்லாஹ்வின் மீது நீங்கள் ‎பொய்க்கற்பனை செய்கின்றீர்களா?” (அல்-குர்ஆன் 10:59)‎

அதிய்யி பின் ஹாதிம் - ரலி அன்ஹூ அவர்கள் அறிவிக்கிறார்கள் (நான் நபி ஸல்லல்லாஹூ ‎அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்தேன் அது சமயம், வேதக்காரர்களான) ‘அவர்கள் ‎அல்லாஹ்வையன்றி தங்களுடைய பாதிரிமார்களையும், தங்களுடைய சந்நியாசிகளையும், ‎மர்யமுடைய மகனார் மஸீஹையும் (தங்கள்) தெய்வங்களாக எடுத்துக் கொண்டனர்’ (9:31) என்ற ‎பொருளுடைய வசனத்தை நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் ஓதக் கேட்டு, ‎‎‘நிச்சயமாக நாங்கள் அவர்களை வணங்குபவர்களாக இருந்ததில்லையே! எனக் கூறினேன்.‎

அதற்கு நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் ‘அ(ந்தக் குருமார்களான)வர்கள் ‎அல்லாஹ் ஹலாலாக்கிய ஒன்றை அவர்கள் ஹராமாக்கி, அதனால் நீங்கள் அதை ‎ஹராமாக்கவில்லையா? மேலும், அல்லாஹ் ஹராமாக்கிய ஒன்றை அவர்கள் ஹலாலாக்கி, ‎அதனால் நீங்கள் அதை ஹலாலாக்கவில்லையா?’ எனக் கேட்டார்கள். ஆம்! என நான் கூறினேன். ‎‎(ஹலாலாக்குவது மற்றும் ஹராமாக்குவதின் விஷயத்தில் அவர்களை பின்பற்றி நடப்பதான) ‎இதுவே அவர்களை நீங்கள் வணங்குவதாகும் என நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் ‎அவர்கள் கூறினார்கள். நூல்: அஹ்மது.‎

16) தொழுகையை விட்டுவிடுதல்!‎
‎‘உங்களை ஸகர் (நரகத்தில்) நுழைய வைத்தது எது?’ (என்று கேட்பார்கள்.) அவர்கள் (பதில்) ‎கூறுவார்கள்: ‘தொழுபவர்களில் நின்றும் நாங்கள் இருக்கவில்லை. ‘அன்றியும், ஏழைகளுக்கு ‎நாங்கள் உணவும் அளிக்கவில்லை. ‘(வீணானவற்றில்) மூழ்கிக்கிடந்தோருடன், நாங்களும் ‎மூழ்கிக்கிடந்தோம். ‘இந்த நியாயத் தீர்ப்பு நாளை நாங்கள் பொய்யாக்கிக் கொண்டும் இருந்தோம். ‎‎‘உறுதியான (மரணம்) எங்களிடம் வரும்வரையில் (இவ்வாறாக இருந்தோம்’ எனக் கூறுவர்). ‎‎(அல்-குர்ஆன் 74:42-47)‎

ஒரு முஸ்லிமுக்கும் இணைவைத்தலுக்கும், இறை நிராகரிப்புக்கும் இடையில் உள்ள வேறுபாடு ‎தொழுகையை விடுவது தான். (ஆதாரம்: முஸ்லிம்)‎

17) தொழுகையில் பொடுபோக்காக, அலட்சியமாக இருத்தல்!‎
இன்னும், (கவனமற்ற) தொழுகையாளிகளுக்குக் கேடுதான். அவர்கள் எத்தகையோர் என்றால் தம் ‎தொழுகையில் பராமுகமாக(வும், அசிரத்தையாக)வும் இருப்போர். ” (அல்-குர்ஆன் 107:4-5)‎

அபூஹுரைரா ‎رَضِيَ اللَّهُ عَنْهُ‎ அறிவிக்கிறார்கள்: நபி ‎صلى الله عليه وسلم ‏அவர்கள் கூறினார்கள்: மறுமையில் ‎ஒரு மனிதனின் அமல்களைப் பற்றி விசாரிக்கப் படும்போது தொழுகையைப் பற்றியே முதன் ‎முதலாக விசாரிக்கப்படும். அது சீராக அமைந்து விடுமேயானால் ஏனைய அனைத்து வணக்க ‎வழிபாடுகளும் சீராகவே அமையும். அது சீராகவில்லையென்றால் ஏனைய அனைத்தும் ‎சீரற்றதாகவே இருக்கும். (ஆதாரம்: ஸுனன் அபூதாவுத்)‎

18) அவசர அவசரமாக தொழுதல்!‎
‎“முஹம்மது நபி ‎صلى الله عليه وسلم‎ அவர்கள் கூறினார்கள் : ‘திருடர்களில் மிகவும் மோசமான திருடன் ‎தொழுகையில் திருடுபவன்’ என்று நபி ‎صلى الله عليه وسلم‎ அவர்கள் கூறியபோது, அல்லாஹ்வின் ‎தூதரே தொழுகையில் எப்படி ஒருவன் திருடுவான்? என்று நபித் தோழர்கள் கேட்டனர். ‘தனது ‎ருகூவையும், ஸுஜுதையும் பூரணமாகச் செய்யாதவனே அந்தத் திருடன்’ என்று நபி ‎صلى الله عليه وسلم‎ ‎அவர்கள் பதிலளித்தாகள். (அறிவிப்பவர் : அபூகதாதா ரலி, நூற்கள் அஹ்மத், ஹாகிம், தப்ரானி)‎

‎“ருகூவை பூரணமாக செய்யாத, ஸஜ்தாவை மிக குறுகிய நேரத்திலும் செய்த ஒருவரைப் பார்த்து, ‎‎“இந்த நிலையிலேயே தொழக்கூடியவர்கள் இறக்க நேரிட்டால், அவர் முஹம்மது நபி ‎صلى الله عليه ‏وسلم‎ அவர்களின் மார்க்கத்தை விட்டு விட்டு வேறு மார்க்கத்தை நிலைநாட்டியவராகத்தான் ‎மரணிப்பார்” என்று நபி ‎صلى الله عليه وسلم‎ அவர்கள் கூறினார்கள்.‎

19) அல்லாஹ் அல்லாதவற்றின் மீது சத்தியம் செய்தல்!‎
‎“அல்லாஹ் அல்லாதவற்றின் மீது சத்தியம் செய்தவர் இணைவைத்து விட்டார் என ‎அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்” அறிவிப்பவர் : இப்னு உமர் (ஸலி), ஆதாரம் : ‎அபூதாவுத், அஹ்மத். (என் தந்தை) உமர் இப்னு கத்தாப் (ரலி) அவர்கள் பயணிகள் சிலரிடையே ‎இருந்து கொண்டிருந்தபோது அவர்களை அடைந்தேன். அப்போது உமர் (ரலி) அவர்கள் தம் ‎தந்தையின் மீது சத்தியம் செய்தார்கள். உடனே இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மக்களை அழைத்து, ‎‎‘அறிந்து கொள்ளுங்கள்! உங்கள் தந்தையர் மீது சத்தியம் செய்வதை அல்லாஹ் உங்களுக்குத் ‎தடை செய்துவிட்டான். சத்தியம் செய்யமுற்படுபவர் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்யட்டும். ‎அல்லது மெளனமாக இருந்துவிடட்டும்’ என்று கூறினார்கள். அறிவிப்பவர் :இப்னு உமர் (ரலி), ‎ஆதாரம் : புகாரி.‎

20) வேண்டுமென்றே ஜமாஅத் தொழுகையை தவறவிடுதல்!
நீங்கள் தொழுகையையும் நிலைநாட்டுங்கள். ஜகாத்தும் கொடுத்து வாருங்கள். மேலும் என் ‎முன்னிலையில் (தலை சாய்த்து) ருகூஉ செய்பவர்களுடன் நீஙகளும் சேர்ந்து கொள்ளுங்கள். ‎‎(அல்குர்ஆன் 2 : 43)‎

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ஜமாஅத்தாகத் தொழுவது தனித்துத் தொழுவதையும் விட ‎இருபத்தி ஏழு மடங்கு சிறப்பிற்குரியதாகும். நான் தொழுகைக்கு ஏவி, தொழுகையை முன்னின்று ‎நடத்துவதற்காக யாரையேனும் நியமித்து விட்டு ஜமாஅத்துத் தொழுகைக்கு வராதோரின் ‎இல்லங்களுக்கு நானே சென்று அவர்கள் அங்கிருக்கும் நிலையில் அவ்வில்லங்களுக்குத் தீ ‎வைக்க விழைகின்றேன். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), ஆதாரம்: புகாரி, முஸ்லிம்

21) தொழுகையில் இமாமை முந்துதல்!‎
முஹம்மது நபி ‎صلى الله عليه وسلم‎ அவர்கள் கூறினார்கள் “உங்களுடைய செயல்களை இமாமுக்கு ‎முன்னால் ஆக்காதீர்கள்! இமாம் ‘அல்லாஹ் அக்பர்’ என்று கூறினால் நீங்களும் ‘அல்லாஹ் ‎அக்பர்’ என்று சொல்லுங்கள்; இமாம் ‘வலழ்ழாலீன்’ என்று கூறினால் நீங்கள் “ஆமீன்” என்று ‎சொல்லுங்கள்”. மற்றொரு அறிவிப்பில், ‘நிச்சயமாக இமாமைப் பின்பற்ற வேண்டும்’ என்று ‎கூறினார்கள். மேலும், ‘இமாமுக்கு முந்தி தலையை உயர்த்துபவர் மறுமையில் அவருடைய ‎தலையை கழுதையின் தலையைப் போல் அல்லாஹ் ஆக்கிவிடுவான் என்று அவர் ‎பயந்துக்கொள்ள வேண்டாமா?” என்றார்கள். ‎

22) கொலை செய்தல்!‎
‎“எவனேனும் ஒருவன், ஒரு முஃமினை வேண்டுமென்றே கொலை செய்வானாயின் அவனுக்கு ‎உரிய தண்டனை நரகமே ஆகும். என்றென்றும் அங்கேயே தங்குவான். அல்லாஹ் அவன் மீது ‎கோபம் கொள்கிறான்; இன்னும் அவனைச் சபிக்கிறான். அவனுக்கு மகத்தான வேதனையையும் ‎‎(அல்லாஹ்) தயாரித்திருக்கிறான்” (அல்-குர்ஆன் 4:93)‎

‎‘நிச்சயமாக எவன் ஒருவன் கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தை(த் ‎தடுப்பதற்காகவோ) அன்றி, மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் ‎யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்; மேலும், எவரொருவர் ஓராத்மாவை வாழ ‎வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்’ (அல்-குர்ஆன் 5:32)‎

23) விபச்சாரம் செய்தல்!‎
‎“நீங்கள் விபச்சாரத்தை நெருங்காதீர்கள்; நிச்சயமாக அது மானக்கேடானதாகும். மேலும், (வேறு ‎கேடுகளின் பக்கம் இழுத்துச் செல்லும்) தீய வழியாகவும் இருக்கின்றது” (அல்-குர்ஆன் 17:32)‎

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘மூன்று நபர்கள், மறுமைநாளில் அல்லாஹ் அவர்களுடன் ‎பேசவும் மாட்டான், அவர்களைப் பரிசுத்தப்படுத்தவும் மாட்டான், அவர்களைப் பார்க்கவும் ‎மாட்டான். அவர்களுக்கு நோவினை தரும் வேதனையுமுண்டு. அவர்கள் விபச்சாரம் புரியும் ‎வயோதிகன், பொய்யனான அரசன், பெருமையடிக்கும் ஏழை.” (ஆதாரம் : ஸஹீஹ் முஸ்லிம்)‎

‎24) ஓரினப் புணர்ச்சி (ஆணும் ஆணும் புணர்ச்சி) செய்தல்!‎

‎“மேலும், லூத்தை (அவர் சமூகத்தாரிடையே நபியாக அனுப்பி வைத்தோம்); அவர் தம் ‎சமூகத்தாரிடம் கூறினார்: ‘நிச்சயமாக நீங்கள் உலகத்தாரில் எவருமே உங்களுக்கு முன் ‎செய்திராத மானக்கேடான ஒரு செயலை செய்ய முனைந்து விட்டீர்கள். நீங்கள் ஆண்களிடம் ‎‎(மோகம் கொண்டு) வருகிறீர்களா? வழி மறி(த்துப் பிரயாணிகளைக் கொள்ளையடி)க்கவும் ‎செய்கின்றீர்கள்; உங்களுடைய சபையிலும் வெறுக்கத்தக்கவற்றைச் செய்கின்றீர்கள்’ என்று ‎கூறினார்; அதற்கு அவருடைய சமூகத்தாரின் பதில்: ‘நீர் உண்மையாளரில் (ஒருவராக) இருப்பின் ‎எங்கள் மீது அல்லாஹ்வின் வேதனையைக் கொண்டு வருவீராக’ என்பது தவிர வேறு ‎எதுவுமில்லை” (அல்-குர்ஆன் 29:28-29)‎

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ‘லூத் (அலை) சமுதாயத்தினர் செய்த செயலை ‎செய்யக்கூடியவர்களைக் கண்டால் செய்தவனையும் செய்யப்பட்டவனையும் கொன்றுவிடுங்கள்’ ‎அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி), ஆதாம் : அஹ்மத்.‎

25) வட்டி வாங்குதல், கொடுத்தல், வட்டி சம்பந்தமான தொழில்களில் பணிபுரிதல்!‎
‎“ஈமான் கொண்டவர்களே! நீங்கள் உண்மையாக முஃமின்களாக இருந்தால், அல்லாஹ்வுக்கு ‎அஞ்சியடங்கி, எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டு விடுங்கள். இவ்வாறு நீங்கள் ‎செய்யவில்லையென்றால் அல்லாஹ்விடமிருந்தும், அவனுடைய தூதரிடமிருந்தும் போர் ‎அறிவிக்கப்பட்டு விட்டது (என்பதை அறிந்து கொள்ளுங்கள்)- நீங்கள் தவ்பா செய்து ‎‎(இப்பாவத்திலிருந்தும் ) மீண்டுவிட்டால், உங்கள் பொருள்களின் அசல் - முதல் - உங்களுக்குண்டு; ‎‎(கடன்பட்டோருக்கு) நீங்கள் அநியாயம் செய்யப்பட மாட்டீர்கள்” (அல்-குர்ஆன் 2:278-2:279)‎

‎“வட்டி வாங்கிப் புசிப்பவன், அதனைப் புசிக்க வைப்பவன், அதற்காக (கணக்கு) எழுதுபவன், ‎அதற்கு சாட்சியம் கூறும் இருவர் ஆகியேரைப் பெருமானார் (ஸல்) அவர்கள் சபித்துவிட்டு, ‎அத்தனை பேரும் (குற்றத்தில்) சமமானவர்” அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி), ஆதாரம்: ஸஹீஹ் ‎முஸ்லிம்.‎

26) மது அருந்துதல்!‎
மது அருந்துபவர், அதனை அருந்தச் செய்பவர், வாங்குபவர், விற்பவர், தயாரிப்பாளர், சுமப்பவர், ‎இதன் மூலம் கிடைத்த வருவாயை சாப்பிடுபவர்கள் அனைவரையும் நபி (ஸல்) அவர்கள் ‎சபித்துள்ளார்கள். (ஆதாரங்கள் : அபூதாவுத், திர்மிதி, இப்னுமாஜா)‎

மது அருந்தி போதையடைந்தவனின் நாற்பது நாட்களின் தொழுகை ஏற்றுக் கொள்ளப்பட ‎மாட்டாது. அவன் அவ்வாறே இறந்துவிட்டால் நரகில் நுழைவான். தவ்பாச் செய்தால் அல்லாஹ் ‎அவனை மன்னிப்பான். மீண்டும் மது அருந்தினால் அவனுடைய நாற்பது நாட்களின் தொழுகை ‎ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. அவன் அவ்வாறே இறந்துவிட்டால் நரகில் நுழைவான். தவ்பாச் ‎செய்தால் அல்லாஹ் அவனை மன்னிப்பான். மீண்டும் மது அருந்தினால் அவனுடைய நாற்பது ‎நாட்களின் தொழுகை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. அவன் அவ்வாறே இறந்துவிட்டால் நரகில் ‎நுழைவான். தவ்பாச் செய்தால் அல்லாஹ் அவனை மன்னிப்பான். மீண்டும் அருந்தினால் மறுமை ‎நாளில் ரத்கத்துல் கப்பால் எனும் பானத்தை அல்லாஹ் அவனுக்கு புகட்டுவது ‎கடமையாகிவிட்டது என்று நபி(ஸல்)அவர்கள் கூறியபோது, நபித்தோழர்கள் அல்லாஹ்வின் ‎தூதர்(ஸல்)அவர்களே! ரத்கத்துல் கப்பால் என்றால் என்ன? என்று கேட்டனர். அதற்கவர்கள், ‎நரகவாசிகளிடம் பிழிந்தெடுக்கப்பட்ட பானம் என்று பதிலளித்தார்கள். (அறிவிப்பவர்: ‎அப்துல்லாஹ் பின் அம்ர்(ரலி) நூல்: இப்னுமாஜா)‎

27) சூதாட்டத்தில் ஈடுபடுதல்!‎
‎“(நபியே!) மதுபானத்தையும், சூதாட்டத்தையும் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்; நீர் ‎கூறும்; “அவ்விரண்டிலும் பெரும் பாவம் இருக்கிறது; மனிதர்களுக்கு (அவற்றில் சில) ‎பலன்களுமுண்டு; ஆனால் அவ்விரண்டிலும் உள்ள பாவம் அவ்விரண்டிலும் உள்ள பலனைவிடப் ‎பெரிது.” (அல்குர்ஆன் 2: 219)‎

ஈமான் கொண்டோரே! மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும், அம்புகள் ‎எறிந்து குறி கேட்பதும், ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களிலுள்ளவையாகும்; ஆகவே ‎நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் - அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள். நிச்சயமாக ‎ஷைத்தான் விரும்புவதெல்லாம், மதுபானத்தைக் கொண்டும், சூதாட்டத்தைக் கொண்டும் ‎உங்களிடையே பகைமையையும், வெறுப்பையும் உண்டு பண்ணி அல்லாஹ்வின் ‎நினைவிலிருந்தும், தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்து விடத்தான்; எனவே, அவற்றை ‎விட்டும் நீங்கள் விலகிக் கொள்ள மாட்டீர்களா? (அல்-குர்ஆன் 5:90-91)‎

28) பொய் பேசுதல்!‎
நிச்சயமாக பொய்யை இட்டுக் கட்டுவதெல்லாம் அல்லாஹ்வின் வசனங்களை நம்பாதவர்கள் ‎தாம்; இன்னும் அவர்கள் தாம் பொய்யர்கள். (அல்குர்ஆன் 16:105)‎

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நயவஞ்சகனின் அடையாளங்கள் மூன்றாகும். (அவையாவன:) ‎அவன் பேசும்போது பொய் பேசுவான்; அவனிடம் நம்பி எதையும் ஒப்படைத்தால் (அதில்) மோசடி ‎செய்வான்; வாக்களித்தால் அதற்கு மாறு செய்வான். அறிவிப்பவர் : அபூ ஹுரைரா(ரலி), ஆதாரம் : ‎புகாரி.‎

29) திருடுதல்!‎
‎“திருடனோ திருடியோ அவர்கள் சம்பாதித்த பாவத்திற்கு, அல்லாஹ்விடமிருந்துள்ள ‎தண்டனையாக அவர்களின் கரங்களைத் தரித்து விடுங்கள். அல்லாஹ் மிகைத்தவனும், ஞானம் ‎மிக்கோனுமாக இருக்கின்றான்” (அல்-குர்ஆன் 5:38)‎

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ‘திருடுபவனை அல்லாஹ் சபிப்பானாக! ஒரு முட்டையைத் ‎திருடினாலும் அவனுடைய கை துண்டிக்கப்படும். கயிற்றைத் திருடினாலும் அவனுடைய கை ‎துண்டிக்கப்படும்’ அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரலி), ஆதாரம் : புகாரி

‎30) லஞ்சம் கொடுத்தல், லஞ்சம் வாங்குதல்!‎

‎“அன்றியும், உங்களுக்கிடையில் ஒருவர் மற்றவரின் பொருளைத் தவறான முறையில் ‎சாப்பிடாதீர்கள்; மேலும், நீங்கள் அறிந்து கொண்டே பிற மக்களின் பொருள்களிலிருந்து(எந்த) ஒரு ‎பகுதியையும், அநியாயமாகத் தின்பதற்காக அதிகாரிகளிடம் (இலஞ்சம் கொடுக்க) ‎நெருங்காதீர்கள்” (அல்-குர்ஆன் 2:188)‎

‎‘லஞ்சம் கொடுப்பவர் மீதும் லஞ்சம் வாங்குபவர் மீதும் அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டுமாக!’ ‎என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் ‎‎(ரலி), ஆதாரம் : இப்னுமாஜா.‎

31) பொய்சாட்சி கூறுதல்!‎
அபூபக்ரா (ரலி) பெரும் பாவங்களில் மிகப்பெரும் பாவத்தை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? ‎என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மூன்று முறை கேட்டார்கள்! அதற்கு நாங்கள், ‎‎‘அல்லாஹ்வின் தூதரே! அறிவியுங்கள் என்றோம். அதற்கவர்கள், ‘அல்லாஹ்வுக்கு ‎இணைவைப்பது, பெற்றோரை நிந்திப்பது, என்று கூறினார்கள். சாய்ந்திருந்த அவர்கள் நிமிர்ந்து ‎உட்கார்ந்து, ‘அறிந்து கொள்ளுங்கள்! பொய் சொல்வதும் பொய்சாட்சி கூறுவதும் தான், அறிந்து ‎கொள்ளுங்கள் பொய் சொல்வதும் பொய்சாட்சி கூறுவதும் தான்’ என்று கூறினார்கள். ‘நிறுத்த ‎மாட்டார்களா? என நாங்கள் கூறும் அளவுக்கு அவற்றை திரும்பத் திரும்பக் ‎கூறிக்கொண்டிருந்தார்கள். ஆதாரம் : புகாரி.‎

32) அவதூறு கூறுதல்!‎
எவர்கள் கற்புள்ள பெண்கள் மீது அவதூறு கூறி (அதை நிரூபிக்க) நான்கு சாட்சிகளைக் கொண்டு ‎வரவில்லையோ, அவர்களை நீங்கள் எண்பது கசையடி அடியுங்கள்; பின்னர் அவர்களது ‎சாட்சியத்தை எக்காலத்திலும் ஏற்றுக் கொள்ளாதீர்கள் - நிச்சயமாக அவர்கள்தான் தீயவர்கள். ‎‎(அல்-குர்ஆன் 24:4)‎

எவர்கள் முஃமினான ஒழுக்கமுள்ள, பேதை பெண்கள் மீது அவதூறு செய்கிறார்களோ, அவர்கள் ‎நிச்சயமாக இம்மையிலும், மறுமையிலும் சபிக்கப்பட்டவர்கள்; இன்னும் அவர்களுக்குக் ‎கடுமையான வேதனையுமுண்டு. (அல்-குர்ஆன் 24:23)‎

33) அநாதைகளின் சொத்துக்களை அபகரித்தல்!‎
‎“நிச்சயமாக, யார் அநாதைகளின் சொத்துக்களை அநியாயமாக விழுங்குகிறார்களோ அவர்கள் ‎தங்கள் வயிறுகளில் விழுங்குவதெல்லாம் நெருப்பைத்தான் - இன்னும் அவர்கள் (மறுமையில்) ‎கொழுந்து விட்டெறியும் (நரக) நெருப்பிலேயே புகுவார்கள். (அல்-குர்ஆன் 4:10)‎

‎‘அழிக்கக் கூடிய ஏழு விஷயங்களைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்’ என்று நபி (ஸல்) அவர்கள் ‎கூறிய போது நாங்கள் அவை என்னென்ன? என்று கேட்டோம். ‎

அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘அல்லாஹ்வுக்கு இணை வைத்தல், சூனியம் செய்தல், ‎நியாயமாகவேயன்றி அல்லாஹ் ஹராமாக்கிய உயிரை கொலை செய்தல், வட்டியின் மூலம் ‎சாப்பிடுதல், அனாதைகளின் பொருளை சாப்பிடுதல், போர்க்களத்தில் புறமுதுகிட்டு ஓடுதல், ‎கற்புள்ள பேதைப் பெண்களின் மீது அவதூறு கூறுதல்’ என்று பதிலளித்தார்கள்.‎

34) கர்வம் கொள்ளுதல்!‎
‎“நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையோராக, வீண் பெருமை உடையோராக இருப்பவர்களை ‎நேசிப்பதில்லை” (அல்-குர்ஆன் 4:36)‎

அபூஹுரைரா ‎رَضِيَ اللَّهُ عَنْهُ‎ அறிவிக்கிறார்கள்: ‘எவன் தன் தலைமுடியை வாரி அழகுபடுத்தி நல்ல ‎ஆடைகளை அணிந்து கர்வத்துடன் தலை நிமிர்ந்து தன்னில் தானே பூரிப்பு அடைந்த வண்ணம் ‎நடந்து செல்கின்றானோ அவன் பூமியில் திடுமெனச் செருகப்பட்டு மறுமை நாள் வரை அதன் ‎அதலபாதாளத்தில் முட்டி மோதி மூழ்கடிக்கப்பட்டு விடுபவன் போலாவான்’ என்று அண்ணல் நபி ‎‎(ஸல்) அவர்கள் கூறினார்கள்.” (ஆதாரம்: புகாரீ, முஸ்லிம்)‎

35) தற்பெருமை, ஆணவம் கொள்ளுதல்!‎
‎‘(பெருமையோடு) உன் முகத்தை மனிதர்களை விட்டும் திருப்பிக் கொள்ளாதே! பூமியில் ‎பெருமையாகவும் நடக்காதே! அகப்பெருமைக்காரர், ஆணவங் கொண்டோர் எவரையும் ‎நிச்சயமாக அல்லாஹ் நேசிக்க மாட்டான். (அல்-குர்ஆன் 31:18)‎

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”எவர் தன்னைப் பற்றி பெரிதாக எண்ணுகிறாரோ அல்லது தனது ‎நடையில் ஆணவம் கொள்கிறாரோ அவர் அல்லாஹவை சந்திக்கும் நாளில் அல்லாஹ அவர் ‎மீது கோபம் கொண்ட நிலையில் சந்திப்பார்.” (ஆதாரம் : அல் அதபுல் முஃப்ரத்)‎

36) அளவு நிறுவையில் மோசடி செய்தல்!‎
‎“அளவு (எடையில்) மோசம் செய்பவர்களுக்கு கேடுதான். அவர்கள் மனிதர்களிடமிருந்து அளந்து ‎வாங்கும் போது நிறைவாக அளந்து வாங்குகின்றனர். ஆனால், அவர்கள் அளந்தோ, நிறுத்தோ ‎கொடுக்கும்போது குறை(த்து நஷ்டமுண்டா)க்குகிறார்கள். நிச்சயமாக அவர்கள் ‎எழுப்பப்படுபவர்களென்பதை அவர்கள் கருத்தில் கொள்ளவில்லையா? (அல்-குர்ஆன் 83:1-4)‎

‎“மேலும், வானம் - அவனே அதை உயர்த்தித் தராசையும் ஏற்படுத்தினான். நீங்கள் நிறுப்பதில் ‎வரம்பு மீறாது இருப்பதற்காக. ஆகவே, நீங்கள் நிறுப்பதை சரியாக நிலை நிறுத்துங்கள்; ‎எடையைக் குறைக்காதீர்கள்” (அல்-குர்ஆன் 55:7-9)‎

37) பிறர் சொத்தை அபகரித்தல்!
அபூ ஸலமா(ரலி) அறிவித்தார்கள் : “எனக்கும் வேறு சிலருக்கும் இடையே ஒரு நிலம் ‎சம்பந்தமான தகராறு இருந்து வந்தது. அதை நான் ஆயிஷா(ரலி) அவர்களிடம் கூறினேன். ‎அவர்கள் சொன்னார்கள்; அபூ ஸலமாவே! (பிறரின்) நிலத்தை (எடுத்துக் கொள்வதைத்) தவிர்த்துக் ‎கொள்ளுங்கள். ஏனெனில், நபி(ஸல்) அவர்கள், ‘ஓர் அங்குலம் அளவு நிலத்தை அநியாயமாக ‎அபகரித்துக் கொள்கிறவரின் கழுத்தில் ஏழு நிலங்கள் மாலையாக (மறுமையில்) கட்டித் தொங்க ‎விடப்படும்” என்று கூறினார்கள்.‎

38) மோசடி செய்தல்!‎
‎“எந்த நபிக்கும் மோசடி செய்வது கூடாது. எவரேனும் மோசம் செய்வாராயின், அவர் மோசம் ‎செய்ததை இறுதி நாளில் கொண்டு வருவார், அவ்வேளையில் ஒவ்வோர் ஆத்மாவுக்கும், அது ‎சம்பாதித்த(தற்குரிய) பலனை(க் குறைவின்றிக்) கொடுக்கப்படும். இன்னும், அவர்கள் ‎எவ்வகையிலும் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்” (அல்-குர்ஆன் 3:161)‎

‎“நிச்சயமாக அல்லாஹ் மோசம் செய்பவர்களை நேசிப்பதில்லை” (அல்-குர்ஆன் 8:58)‎

39) அநீதி இழைத்தல்!‎
‎“அநீதியிழைக்கப்பட்டவரின் சாபத்திற்கு (உங்களால் அநீதிக்கு ஆளானவர் இறைவனிடம் உங்கள் ‎அநீதியைக் குறித்து முறையிட்டு உங்களுக்குக் கேடாகப் பிரார்த்தனை புரிபவதைப் பற்றி) ‎அஞ்சுங்கள். ஏனெனில், அதற்கும் அல்லாஹ்வுக்கும் இடையே எந்தத் திரையும் இல்லை” என்று ‎நபி(ஸல்) அவர்கள் முஆத்(ரலி) யமன் நாட்டுக்கு (ஆளுநராக) அனுப்பி வைத்தபோது கூறினார்கள். ‎அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ்(ரலி), ஆதாரம் : புகாரி.‎

40) புறம் பேசுதல்!‎
முஃமின்களே! (சந்தேகமான) பல எண்ணங்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்; ஏனெனில் ‎நிச்சயமாக எண்ணங்களில் சில பாவங்களாக இருக்கும்; (பிறர் குறைகளை) நீங்கள் துருவித் ‎துருவி ஆராய்ந்து கொண்டிராதீர்கள்; அன்றியும், உங்களில் சிலர் சிலரைப் பற்றிப் புறம் ‎பேசவேண்டாம், உங்களில் எவராவது தம்முடைய இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க ‎விரும்புவாரா? (இல்லை!) அதனை நீங்கள் வெறுப்பீர்கள். இன்னும், நீங்கள் அல்லாஹ்வை ‎அஞ்சுங்கள். நிச்சயமாக பாவத்திலிருந்து மீள்வதை அல்லாஹ் ஏற்றுக் கொள்பவன்; மிக்க கிருபை ‎செய்பவன். (அல்-குர்ஆன் 49:12)‎

புறம் என்றால் என்னவென நீங்கள் அறிவீர்களா? என நபி (ஸல்) அவர்கள் கேட்டபோது, ‎அல்லாஹ்வும் அவனது தூதரும் நன்கறிவர் என நபித்தோழர்கள் கூறினர். அப்போது நபி (ஸல்) ‎அவர்கள், உன்னுடைய சகோதரன் வெறுப்பதை நீ கூறுவது தான் ‘புறம்’ என்றார்கள். நான் ‎கூறுவது என்னுடைய சகோதரனிடம் இருந்தால் அதுவும் புறமாகுமா? என்று கேட்கப்பட்டது. ‎அதற்கு நபி (ஸல்) அவர்கள், நீ கூறுவது உன்னுடைய சகோதரனிடம் இருந்தால் நீ அவனைப் ‎பற்றி புறம் பேசுகிறாய். நீ கூறுவது உன்னுடைய சகோதரனிடம் இல்லையெனில் நீ அவனைப் ‎பற்றி இட்டுக்கட்டுகிறாய் (அவதூறு கூறுகிறாய்) என்றார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), ‎நூல்: முஸ்லிம்)

Kilai Rahman
Doha-Qatar

Tuesday, June 8, 2010

மனிதனின் பலகீன நிலை பாரீர்!

மனிதனின் பலகீன நிலை பாரீர்!

மண்ணிலிருந்து படைக்கப்பட்ட மனித இனத்தைப் பற்றி எல்லாம் வல்ல அல்லாஹ் கீழ்க்கண்ட குர்ஆன் வசனங்களில் தெளிவாக எடுத்துரைக்கிறான். அவை வருமாறு:
4:28 பலகீனமாக படைக்கப்பட்டவன்.
10:44 தனக்குத்தானே அநியாயம் செய்கிறான்.
11:9 நன்றி கெட்டவன்
14:34 மிக்க அநியாயக்காரன், நன்றி கெட்டவன்
16:4 பகிரங்க எதிரி
17:11 அவசரக்காரன்
17:67 நன்றி மறப்பவன்
17:85 மிக மிக அற்ப அறிவை மட்டுமே உடையவன்
17:100 கஞ்சனாக இருக்கிறான்
18:54 அதிகமாகத் தர்க்கம் செய்கிறான்
21:37 அவசரக்காரன்
22:66 நன்றி கெட்டவன்
29:66 இறைவனுக்கு மாறு செய்கிறவன்
33:72 அநியாயக்காரன், மூடன்(ஜாஹில்)
36:77 வெளிப்படையான தர்க்கவாதி
39:8 நேர்வழியிலிருந்து வழி கெடுக்கிறான்
41:49 நிராசைக்காரன்
42:48 நிராகரிப்பவன்
43:15 பகிரங்கமான பெரும் நிராகரிப்பவன்
70:19 அவசரக்காரன்
75:5 மறுமையை பொய்ப்பிக்கிறான்
76:27 மறுமையை மறந்து இவ்வுலகை நேசிக்கிறான்
80:17 நன்றி மறந்தவன்
87:16 மறுமையை மறந்து இவ்வுலகை தெரிவு செய்கிறான்
89:20 பொருளை அளவு கடந்து நேசிக்கிறான்
89:23 நரகம் முன் கொண்டு வரப்படும்போது உணர்வான்
90:4 கஷ்டத்தில் படைக்கப்பட்டவன்
95:5 செயலினால் கீழ்நிலை அடைகிறான்
96:6 வரம்பு மீறுகிறான்
100:6 இறைவனுக்கு நன்றி கெட்டவன்
100:8 பொருளை நேசிப்பதில் அளவு கடந்தவன்
103:2 பெரும் நஷ்டத்தில் இருக்கிறான்

இந்த அனைத்து இறைவாக்குகளையும் மனிதன் படித்து விளங்குவானேயானால் தன்னுடைய இயலாமை-பலகீன நிலை பற்றித் தெளிவாக அறிவான். அவனிடம் ஆணவம், அகங்காரம், தற்பெருமை, நான்தான் என்ற மமதை ஒருபோதும் ஏற்படாது. தன்னைப் படைத்த இறைவனின் ஆற்றல், அதிகாரம் இவை அனைத்தையும் திட்டமாக, தெளிவாக உணர்வான்.

இவ்வளவு குறைபாடுகள் உள்ள மனிதனுக்குக் கொடுக்கப்பட்ட அறிவோ மிகமிக அற்பமானது என்று 17:85ல் அல்லாஹ் கூறி மனிதனுடைய ஆற்றல் குறைவை வெளிப்படுத்தியுள்ளான். மனிதனுக்குக் கொடுக்கப்பட்ட அற்ப அறிவை இறைவனது நிறைவான அறிவுடன் ஒப்பிடும்போது, சமுத்திரத்தில் ஒரு ஊசியை முக்கி எடுத்தால் அதிலுள்ள நீரளவுதானும் மனித அறிவு இல்லை. அந்த அற்ப உலக அறிவிலும் தனி மனிதனுடைய அறிவு, கற்றது கைமண் அளவு; கல்லாதது உலகளவு என்பதை யாரே மறுப்பார்.

பல்வேறு துறைகளில் சிரமப்பட்டு மிகக் கடினமாக உழைத்துப் படித்துப் பட்டங்கள் பல பெற்ற ஒரு பேரறிஞரிடம் முதலாம் வகுப்புப் படிக்கும் கத்துக்குட்டி இல்லை, ஒரு பிரிகேஜி பிஞ்சு எதிர்வாதம் செய்தால் அவனைப்பற்றி என்ன சொல்வோம். அதைவிட மிகமிகக் கேவலமான இழிவான நிலைதான் மிக அற்ப அறிவை உடைய மனிதன் அல்லாஹ் தெள்ளத் தெளிவாக இறக்கியருளிய அல்குர்ஆனிலுள்ள கட்டளைகளுக்கு மேல் விளக்கம் கொடுக்க முற்படுவதாகும்.

தங்களை மவ்லவிகள், ஆலிம்கள், அல்லாமாக்கள், ஷேக்குகள் என பெருமை பேசும் மனிதர்கள் இப்படிப்பட்ட அறிவீனமான இழி செயலைச் செய்ய முற்படுகிறார்கள். மார்க்கத்தை-நேர்வழியை பல கோணல் வழிகளாக்கி-மதமாக்கி அது கொண்டு வயிறு வளர்ப்பவர்கள், நிச்சயம் அல்குர்ஆனில் உள்ளதை உள்ளபடி ஒருபோதும் சொல்ல முடியாது. 2:159,161,162, 7:175-179 இறைவாக்குகள் கூறும் உண்மை இதுவே. மனித சுபாவமே ஷைத்தானின் ஆசை வார்த்தைகளில் மயங்கி அல்லாஹ்வின் கட்டளைகளைப் புறக்கணித்து- நிராகரித்து (25:30) ஷைத்தானைப் பின் தொடர்வதாகவே இருக்கிறது. இது ஆதித் தந்தை ஆதத்தில் தொடங்கி, அவரது மகன், மார்க்கத்தை மதமாக்கும் புரோகிதர்கள், புரோகிதர்களது பக்தர்கள் என தொடர் கதையாகத் தொடர்கிறது. புரோகிதர்களின் வசீகர உடும்புப் பிடியிலிருந்து விடுபட்டு நேரடியாக குர்ஆன், ஆதாரபூர்வமான நபிமொழிகளைப் படித்து விளங்கி அவற்றில் உள்ளது உள்ளபடிச் செயல்படுகிறவர்களே வெற்றியாளர்கள்.

By

Abdul Rahman
Doha

Saturday, June 5, 2010

Face Book (முகநூல்) என்ற போதை

அன்பின் சகோதரர்களே நண்பர்களே உங்கள் அனைவருக்கும் தூய இஸ்லாத்தின் சிறப்பான முகமனை தெரிவித்துக் கொள்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்….


இன்றைய நவீன உலகம் நமது கைக்குல் சுருங்கிவிட்டது இப்படி சுருங்கியதால் மிகப்பெரிய நன்மைகள் இருப்பதைப் போல் தீமைகளும் இருக்கிறது என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

இன்று கையில் கையடக்க தொலைபேசி இல்லாதவர்கள் இல்லை என்கின்ற அளவுக்கு அனைவரிடமும் தொலைபேசி விளையாடுகிறது.அதுபோல் பெரும்பாலான வீடுகளில் இணையத்தள பயன்பாடு அதிகரித்திருக்கிறது.இப்படி வீட்டிலிருந்து அனைத்து துறைகளிலுமே நவீனத்துவம் நுழைந்துதான் உள்ளது.

இப்படிப்பட்ட நிலையில் நாம் கவனிக்க வேண்டிய ஒரு முக்கிய விஷயம் இந்த இணையத்தள பயன்பாடு.இதனை எப்படி பயன்படுத்த வேண்டும்? யார் பயன்படுத்துவது போன்ற விபரங்கள் கண்டிப்பாக நமக்கு தெரிந்திருக்க வேண்டும்.

ஏன் என்றால் இணையத்தளத்தில் எப்படி பல நல்ல விஷயங்கள் படிப்பதற்கு தேவையான தகவல்கள் இருக்கின்றதோ அது போல் அதற்கு சரி சமமாக கெட்ட விஷயங்களும் கொட்டிக்கிடக்கிறது.

இந்த சந்தர்பத்தில் ஒரு உண்மை முஸ்லிம் இதில் அல்லாஹ்வைப் பயந்து நடந்து கொள்ள வேண்டியுள்ளது ஏன் எனில் எவ்வளவு சிறந்தவராக தன்னை ஒருவர் சொல்லிக் கொண்டாலும் சந்தர்பம் அவரை நல்லவரா கெட்டவரா என்று காட்டிக் கொடுத்து விடும்.

இப்படி இணையத்தள பாவனையாளர்கள் இன்று அதிகமானோல் தங்களை தாங்கள் யார் என்று அடையாளப் படுத்தும் ஓர் இடமாக இருப்பதுதான் முகநூல் (Face Book) இதில் உலகத்தில் கிட்டத்தட்ட (02.12.2009 கணிப்பின் படி) முன்னூற்று ஐம்மது மில்லியனுக்கு அதிகமானவர்கள் வாசகர்களாக உலா வருகிறார்கள்.அத்துடன் சென்ற வருட கணிப்பின் படி உலகில் முதல் இடம் பிடித்திருக்கும் இணையத்தளமும் இதுதான்.

350 மில்லியன் வாசகர்களில் கிட்டத்தட்ட பண்ணிரண்டு வீதமானவர்கள் இலங்கையைச் சேர்ந்தவர்கள்.

பேஸ்புக் என்றால் என்ன?


முகநூல் என்று அழைக்கப் படக்கூடிய பேஸ்புக் என்ற இந்த இணையத்தளத்தில் இன்று அதிகமான ஆண்களும் பெண்களும் வாசகர்களாகியுள்ளனர்.இந்த இணையத்தளம்
2004 அன்று Mark Elliot Zuckerberg என்பவரால் உருவாக்கப் பட்டதாகும். ஆரம்பத்தில் இவர் facemash எனும் இணையத்தளத்தையே கண்டுபிடித்தார். பின்னர் தொழிநுட்ப வளர்ச்சி காரணமாக இவரது facemash ஆனது இவரால் facebook ஆக மாற்றப்பட்டது. இரண்டாயிரத்து ஆராம் ஆண்டிலிருந்து 13 வயதிற்கு மேற்பட்ட எவரும் facebook ஜப் பயன்படுத்த முடியுமென்று அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப் பட்டது.

குறிப்பிட்ட காலப்பகுதிக்குல் இந்த இணையத்தளம் மிகப் பெரியதொரு வாசகர் வட்டத்திற்கு உரியதாக மாரியது.

பேஸ் புக்கில் நடப்பது என்ன?

இன்று நண்பர்களை சேமிக்கிறோம் என்று சொல்லித்தான் இளைஞர்கள் இந்த இணையத்தளத்தில் உருப்பினர்களான மாறுகிறார்கள்.

ஆனால் இந்த இணையத்தளத்தில் எப்படிப்பட்ட நற்புகள் உருவாகிறது என்றால் மிகவும் ஆபாசமாகவும்,அந்தரங்கத்தை வெளிப்படுத்தக் கூடியதாகவும் மொத்தத்தில் ஒரு உண்மை மனிதன் அங்கீகரிக்க முடியாத ஒரு நற்புதான் இதில் உருவாகிறது.

உதாரணத்திற்கு ஒருவர் இந்த பேஸ்புக்கில் தனக்குறிய உருப்பினர் அந்தஸ்தைப் பெற்றுக் கொண்டவுடன் அவர் பற்றிய விபரங்களை அதிலே அவர் இடுவதற்கான அவருக்குறிய பகுதி அதிலே ஒதுக்கப் படும் பின் அவர் அதிலே இட்ட தகவல்களை படிப்பதற்கு அணைவருக்கும் அனுமதிக்கப் பட்டுவிடும்.

தனது புகைப்படம்.

தான் யார்?

எந்த நாட்டை சேர்ந்தவர்?

தொழில் செய்பவரா? அல்லது மாணவரா?

இது போன்ற என்னோரன்ன தகவல்கள் அதிலே பதியப் படும் இவையனைத்தும் அனைவரும் படிப்பதற்கு ஏற்ற வகையில் வெளிப்படையாகவே இருக்கும்.

இப்படியிருக்கும் போது இதில் ஒருவர் இன்னொருவருடன் நற்பை ஏற்படுத்துவார் அந்த நேரத்தில் ஆண் பெண் என்ற வித்தியாசமே இருக்காது.

ஆரம்பத்தில் வேறுவிதமாக நற்பு என்ற பெயரில் உருவெடுக்கும் இந்த உறவு காலப்போக்கில் காதலாக,காமமாக கள்ளத் தொடர்புகளாக மாறுவதை இதில் தொடர்புல்ல எவரும் மறுக்க முடியாது.

அத்துடன் இப்படிப்பட்ட பேஸ்புக் தொடர்பால் பாதிக்கப் பட்டு வாழ்க்கை இழந்தவர்களின் வரலாறுகளும் பல உண்டு என்பதும் உண்மை.

இந்த வகையான நற்புகளில் ஈடுபடும் சிலர் இதற்கு ஒரு காரணத்தை பதில் என்ற பெயரில் குறிப்பிடுகிறார்கள்.

அதாவது நாங்கள் இஸ்லாமியப் பிரச்சாரம் செய்கிறோம் நமது மார்கத்தை உலகத்திற்கு எத்தி வைக்கிறோம் இதுதான் அவர்களின் பதில்.

முதலில் ஒரு இந்து அன்பரிடம் அல்லது கிருத்தவ நண்பரிடம் நாம் நமது மார்கத்தை பிரச்சாரம் சைகின்ற போது நாம் ஒரு இந்துவாகவோ கிருத்தவராகவோ மாற வேண்டிய அவசியம் இல்லை அப்படி நமது மார்கம் நமக்கு கற்றுத்தரவும் இல்லை.

ஆனால் இந்த பேஸ்புக் (முகநூல்) பிரச்சாரகர்கள்(?) அத்தனைபேரும் நாங்கள் இதிலே பிரச்சாரம் செய்கிறோம் என்று வாய் கூசாமல் கூறுகிறார்கள்.

அத்தனை அனாச்சாரமும் கொட்டிக்கிடக்கின்ற இடத்தில் தான் நீங்களும் சேர வேண்டுமா? அப்படி உங்களுக்கு அவர்களிடம் இஸ்லாத்தை பிரச்சாரம் செய்ய வேண்டுமென்றால் வேறு எத்தனையோ வழிமுறைகளை கையாளலாமே? அதை எல்லாம் விட்டு விட்டு ஏன் ஒரு வயதுக்கு வந்த ஆண் ஒரு வயதுக்கு வந்த அன்னிய பெண்ணிடம் மாத்திரம் பேச வேண்டும் பழக வேண்டும்?

போட்டோ இல்லை என்றால் அல்லது குறிப்பிட்ட அந்த நபர் பெண்ணாக இல்லை என்றால் யாரும் அவர்களுக்கு பிரச்சாரம் செய்ய முன்வருவதில்லை.இது தான் பேஸ்புக் பிரச்சாரத்தின் லச்சனம்.

ஆக அன்பின் இஸ்லாமிய நெஞ்சங்களே! சகோதர சகோதரிகளே!

அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுங்கள் facebook ஐ தவிர்ந்து கொள்ளுங்கள்.