Sunday, January 24, 2010
Saturday, January 23, 2010
உன் தாயின் கருவறையில் உனக்கு சுவாசகாற்றை தந்தது யார்?
அல்லாஹ் - அளவற்ற அருளாளன்!
சகோதரர்களே
இங்கு அல்லாஹ்வை அளவற்ற அருளாளன் என்று புகழப்பட்டுள்ளது அதற்குப் பொருள் என்ன என்றைக்காவது சிந்தித்ததுண்டா? வாருங்கள் சிந்திப்போம்
அல்லாஹ்வின் அருளுக்கு அளவுகோல் உள்ளதா? என்று சிந்தித்துப்பாருங்கள்!· உங்கள் தாயின் கர்ப்பக்கோளரையில் பார்ப்பதற்கே அறுவருப்பான சதைப் பிண்டமாக நீங்கள் இருந்தீர்கள் உங்களளுக்கு உருவம் கொடுத்து அருளினான்!· உங்களுக்கு அழகான பொம்மையைப் போன்று உருவம் கொடுத்தால் மட்டும் போதுமா என்று எண்ணி உங்களுக்கு உணர்வையும் கொடுத்தான்!· உணர்வு மட்டும் போதுமா என்று எண்ணி உணர்வை வெளிப்படுத்தும் ஆற்றலையும் கொடுத்தான்· குறிப்பிட்ட மாதங்கள் தாயின் வயிற்றில் தங்க வைத்து உணவையும் கொடுத்தான்!· தாயின் சுவாசக்காற்றுடன் உங்களுக்கும் சற்று சுவாசக் காற்றை சிரமமின்றி கொடுத்தான்!· மூச்சுவிடக்கூட முடியாத கப்ரு போன்ற அந்த கற்பக் கோளரையில் அழகான நித்திரை கொடுத்தான்!· இறுதியாக முழு வடிவம் கொடுத்து உங்களை குழந்தையாக பிறக்க வைத்தான்!· குழந்தை பிறந்ததும் தாயின் மடியில் தவழ்வதற்காக அவளிடம் அன்பைக் கொடுத்தான் தந்தையிடம் பாசத்தை கொடுத்தான்!· அன்பு செலுத்த பெற்ற தாய் தந்தை மட்டும் போதுமா? என்று எண்ணி உற்றார் உறவினர்களின் உள்ளத்தில் மென்மையாக தொட்டுக்கொஞ்சும் கலையை கொடுத்தான்! அனைவரும் உங்களை கொஞ்சி மகிழ்ந்தனர் நீங்களோ கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வந்தீர்கள்!
அல்லாஹ் - நிகரற்ற அன்புடையோன்
இங்கு அல்லாஹ்வை நிகரற்ற அன்புடையோன் என்று புகழப்பட்டுள்ளது அதற்குப் பொருள் என்ன என்றைக்காவது சிந்தித்ததுண்டா? வாருங்கள் சிந்திப்போம்!
அல்லாஹ்வின் அன்புக்கு அளவுகோல் உள்ளதா? என்று சிந்தித்துப்பாருங்கள்!· சுவாசிக்கும் காற்றைக்கொடுத்து உதவினான், பருகும் நீரை கொடுத்து உதவினான், அமர்வதற்கு நிலத்தையும், ரசிப்பதற்கு இயற்கை எழில் கொஞ்சும் அழகையும் கொடுத்தான்! இது நிகரற்ற அன்பில்லையா?·
நிலத்தில் உணவுக்காக உழுகிறீர்கள் உங்கள் உழைப்புக்கு ஊதியமாக பயிரை வெளிப்படுத்துகிறான் சிந்தித்துப் பாருங்கள்
நிலத்தில் பயிர் வெளிப்படாமல் இருந்தால் எதை உண்பீர்கள்! இது நிகரற்ற அன்பில்லையா?·
சுவாசிக்கும் காற்றின் உதவியுடன் விமானத்தில் பறக்கிறீர்கள், பருகும் நீரில் மீன் பிடித்து மகிழ்கிறீர்கள், நிலத்தில் உழுதும், வீடு கட்டியும், உங்கள் மலஜலங்களை சுத்தப்படுத்தியும் சுகம் காண்கிறீர்கள் இறுதியாக மரணித்து மண்ணரைக்கு செல்ல இடத்தையும் ஒதுக்கினான் இது நிகரற்ற அன்பில்லையா?சிந்தித்துப்பாருங்கள்!
உங்கள் மலஜலங்களை மண் விழுங்காமலும் விழுங்கியதை மக்கச் செய்யாமலும் இறுதியாக உங்கள் மலஜலம் கெட்ட துர்நாற்றம் பிடித்து காற்றில் கலந்து பரவினால் இந்த உலகில் வாழ முடியுமா? இப்படிப்பட்ட இழிவான நிலைக்கு உங்களை அல்லாஹ் தள்ளிவிட்டானா? அல்லது உங்களை செம்மையாக்கி வாழ வழிவகை செய்தானா?·
தாயின் வயிற்றில் இருக்கும் போது உங்கள் உடலில் இதயத்தை பொறுத்தியவன் எவன்?·
நுரையீரைலையும், கல்லீரலையும் பொருத்தயவன் எவன்?·
பற்களையும் நாக்கையும் உதடுகளையும் பொறுத்தியன் எவன்?·
மலஜலம் கழிக்க அந்தரங்க உறுப்புகளையும் அதன் அருகில் வீரியமிக்க விந்துத் துளிகளையும் பொறுத்தியவன் எவன்?·
எலும்புகளையும் நரம்புகளையும் அவற்றை இயக்க சிந்திக்கும் மூளையையும் அதற்கென்று நரம்புகளையும், தோலையும் பொருத்தியன் எவன்?· துள்ளிக்குதிக்கும் நீரை உங்கள் முதுகுத்தண்டு வடப்பகுதியில் செம்மையாக்கியவன் எவன்?·
முகவரியற்ற உங்களுக்கு முகவரியைக் கொடுத்து உதவியவன் எவன்? இதன் மூலம் உலகில் வாழவழிவகை செய்து உங்களுக்கு உங்கள் மனைவியை கொடுத்து அவளின் மூலம் கட்டுக்கடங்காத மிருகத்தனமான உங்கள் உடல் சுகத்தை தனிப்பவன் எவன்?
ஓ மாண்புமிகு மனிதர்களே!உங்களில் நல்லோரும் உள்ளனர், உங்களில் தீயோரும் உள்ளனர் நல்லோர் படைத்த இறைவனின் அருளையும் அன்பையும் நினைத்து புகழ்ந்துக்கொண்டும் அஞ்சிக்கொண்டும், தீயோர் படைத்த இறைவனின் அன்பையும் அருளையும் மறந்து தங்கள் நாதாக்களையும், மரணித்த மனிதர்களிடம் உதவி தேடியும் அலைகின்றனர்.உங்கள் நாதாக்களும் அவ்லியாக்களும் எதைப் படைத்தனர் என்பதை பட்டியல் போட்டு காட்ட முடியுமா? அற்பமான ஒரு ஈ-யின் இறக்கையைக்கூட அவர்களால் உருவாக்க முடியுமா? அல்லது அந்த ஈ-யிடும் முட்டையின் ஓட்டைக் கூட உருவாக்க முடியுமா?
உங்களில் வசதிபடைத்தோர் ஏழைகளை உதாசீனப்படுத்துகிறீர்கள் வலிமையான ஆற்றல் படைத்தோர் வலிமைற்ற மனிதர்களை அடக்குமுறைகளால் அடக்கிக்கொண்டும் வாழ்கிறிர்கள்! பெற்ற தாய் தந்தையரை வயதான காலத்தில் துரத்துகிறீர்கள், கட்டிய மனைவியை காசுக்காக மிதிக்கிறீர்கள், பெற்ற பிள்ளைகளை முறையாக பேணாமல் அநாதைகளைப் போன்று அங்கும் இங்கும் அலைய விடுகிறீர்கள் இந்த பாவங்களையெல்லாம் செய்துக் முஸ்லிமாகிய நான் சுவனம் போகவேண்டும் என்று எண்ணினால் உங்கள் ஆசை நிறைவேறுமா?
மஹ்சரில் அல்லாஹ்வின் கேள்விக்கணைகளிலிருந்து உங்களால் தப்பித்து ஓடிவிட முடியுமா? வாதத்திறமையால் தவறான வழியில் அடைந்த சொத்து சுகங்கள் பயனளிக்குமா?எதற்கும் சக்தியற்று, உழைக்க வசதியற்ற வக்கற்றவர்களாக பிறந்தீர்கள்! வாழ்க்கையைக் கொடுத்தான்! வசதிவாய்ப்புகளைக் கொடுத்தான் தாயைக் கொடுத்தான், தாரத்தை கொடுத்தான் பிள்ளைச் செல்வத்தை கொடுத்தான், உங்களை நேர்வழிப்படுத்த அருள்மறைக் குர்ஆனையும் நல்வழிப்படுத்த அண்ணல் நபிகளார் (ஸல்) அவர்களின் வாழ்க்கை நெறிமுறைகளான ஹதீதுகளையும் உங்களிடம் கூலியை எதிர்பார்க்காமல் இலவசமாக அருளினானே இந்த அன்பிற்கு நிகராக வேறு ஏதாவது அன்பு உள்ளதா? இந்த அருளுக்கு நிகரான அருள் உலகில் ஏதாவது உள்ளதா?
சிந்தித்துப்பாருங்கள் இனியாவது அல்லாஹ்வின் அருளையும் அன்பையும் உணர்ந்து அவனுக்கு அஞ்சிவாழும் மூமின்களாக மாற முயற்சி செய்யுங்கள்!
உங்கள் மீது அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக!
அப்துல் ரஹ்மான்
கீழக்கரை

Tamil Islamic Website
Tamil Islamic வெப்சைட்
1. www.islamkalvi.com
2. www.islamiyadawa.com
3. www.suvanathendral.com
4. www.tamilquran.com
5. http://thiruquran.com
6. www.tharjuma.com
7. www.tamilislam.com
8. www.satyamargam.com
9. www.readislam.net
10. www.nouralislam.org
11. www.tamilmuslimmedia.com
12. www.quraaninkural.com
13. www.rahmathtrust.com
14. www.a1realism.com
15. www.tmmk.info
16. www.tmmk-ksa.com
17. www.intjonline.in
18. www.intj.in
19. www.tntj.net
20. www.onlinepj.com
21. www.rajaghiri.net
22. www.rajaghiri.com
23. www.rajaghiribaithulmal.com
24. www.pandaravadai.com
25. www.valoothoor.com
26. www.avoor.tk
27. www.govindakudi.com
28. www.ilayangudikural.com
29. www.mudukulathur.com
30. www.chittarkottai.com
31. www.nellaieruvadi.com
32. www.nidur.info
33. www.kadayanalluraqsha.com
34. www.nidurseasons.com
35. www.lalpet.com
36. www.tzronline.com
37. www.vkalathur.com
38. www.counselormansoor.com
39. www.makkamasjid.com
40. www.k-tic.com
41. www.mypno.com
42. www.muslimleaguetn.com
43. www.parangipettai.com
44. www.parangi.com
45. www.portonovo.in
46. www.imandubai.org
47. www.iqna.ir
48. www.samarasam.net
49. www.ift-chennai.org
50. www.alhasanath.org
51. www.srilankanmuslims.net
52. www.idmk.in
53. www.idmk.org
54. www.tmml.org
55. www.samooganeethi.org
56. www.tamilislam.webs.காம்
57. www.tamilmuslim.in
58. www.darulsafa.com
1. www.islamkalvi.com
2. www.islamiyadawa.com
3. www.suvanathendral.com
4. www.tamilquran.com
5. http://thiruquran.com
6. www.tharjuma.com
7. www.tamilislam.com
8. www.satyamargam.com
9. www.readislam.net
10. www.nouralislam.org
11. www.tamilmuslimmedia.com
12. www.quraaninkural.com
13. www.rahmathtrust.com
14. www.a1realism.com
15. www.tmmk.info
16. www.tmmk-ksa.com
17. www.intjonline.in
18. www.intj.in
19. www.tntj.net
20. www.onlinepj.com
21. www.rajaghiri.net
22. www.rajaghiri.com
23. www.rajaghiribaithulmal.com
24. www.pandaravadai.com
25. www.valoothoor.com
26. www.avoor.tk
27. www.govindakudi.com
28. www.ilayangudikural.com
29. www.mudukulathur.com
30. www.chittarkottai.com
31. www.nellaieruvadi.com
32. www.nidur.info
33. www.kadayanalluraqsha.com
34. www.nidurseasons.com
35. www.lalpet.com
36. www.tzronline.com
37. www.vkalathur.com
38. www.counselormansoor.com
39. www.makkamasjid.com
40. www.k-tic.com
41. www.mypno.com
42. www.muslimleaguetn.com
43. www.parangipettai.com
44. www.parangi.com
45. www.portonovo.in
46. www.imandubai.org
47. www.iqna.ir
48. www.samarasam.net
49. www.ift-chennai.org
50. www.alhasanath.org
51. www.srilankanmuslims.net
52. www.idmk.in
53. www.idmk.org
54. www.tmml.org
55. www.samooganeethi.org
56. www.tamilislam.webs.காம்
57. www.tamilmuslim.in
58. www.darulsafa.com
Monday, January 18, 2010
மருந்தும் மறக்கக்கூடாதவைகளும்
- ஒரு நோய்க்குத் தரப்படும் மருந்தின் பக்க விளைவுகளே சில வேளை இன்னொரு நோயாக வெளிப்படலாம். இருமலுக்குத் தரப்படும் சில மருந்துகள் தூக்கத்தை தூண்டும். சில மருந்துகள், சோர்வு, அசதி, மயக்கம், வயிற்றுப்புண், மூட்டுவலி உண்டாக்கும்.
- எடுத்ததற்கெல்லாம் வலி நிவாரண மாத்திரைகளை விழுங்குவது குடல் புண்ணுக்கு விருந்து வைத்து அழைக்கும்.
- நோயைப் பற்றியும் தரப்படும் மருந்துக்களின் தன்மைகளையும், பக்க விளைவுகளயும் பற்றி இணைய தளங்களில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
- பரிந்துரையின்றி மருந்துகள் வாங்கி சுய மருத்துவம் செய்யாதீர்கள். தவறாகப் பயன்படுத்தபடும் மருந்துகள் உயிரைக் குடித்துவிடும்.
சில நோயாளிகளுக்கு சில மருந்துகள் கொடுக்கக் கூடாது. சில மருந்தை சேர்த்துக் கொடுக்க வேண்டியிருக்கும். மருந்தின் அளவு நோயாளியின், வயது மற்றும் எடைக்குத் தக்கபடி மாறுபடும் . - ஆன்டிபயாட்டிக் மாத்திரைகளை அரைகுறையாக சாப்பிட்டு நிறுத்தக் கூடாது. நோய் கிருமிகள் அதிக பலம் பெற்றுவிடும்.
எடுத்ததெற்கெல்லாம் ஆன்டிபயாடிக் மாத்திரைகள் குழந்தைகளுக்கு கொடுப்பது பிறகு தேவைப்படும் நேரம் அந்த மருந்து செயல் படாதவாறு நோய் கிருமிகள் அந்த மருந்தை எதிர்த்து நிற்கும் திறன் பெற்று விடுகின்றன. - மருந்துகள் ஊட்டச்சத்து அல்ல. தேவையின்றி உடலில் ஏற்றிக் கொள்ளக் கூடாது.
- அலோபதி மருத்துவர் எழுதித்தரும் மருந்துகளுக்கு நிகரான ஆயுர்வேத மருந்துகளை நீங்களாக சாப்பிடாதீர்கள்.
- நோயாளி அனுபவப்படுவது நோய்க் குறிகளைத் தான். அதனைக் கொண்டு மருந்தை தீர்மானிக்கக் கூடாது. ஒரு மருத்துவர் சரியாக ஆராய்ந்து, சில பரிசோதனைகள், செய்து நோயை தீர்மானித்து மருந்து கொடுப்பது தான் சரி.
- காலாவதியான மருந்துக்களை தூக்கி எறிந்து விடுங்கள்.
ஒரு முறை திறந்த குப்பி மருந்துகளை நீண்ட நாள் உபயோகிக்க வேண்டாம். குளிர் பதன பெட்டியில் வைத்தால் கூட இரு வாரங்களில் செயல் திறன் குறைய ஆரம்பிக்கும். - மருந்து கொடுக்க சமையல் கரண்டிகளை பயன் படுத்தாதீர்கள். அளவு மாறிவிடும்.
- ஒருவர் உபயோகித்த மருந்தை இன்னொருவருக்குக் கொடுக்காதீர்கள்.
வரட்டு இருமலுக்கு கொடுத்த மருந்தை சளி இருமலுக்கு கோடுக்காதீர்கள். அதற்கு சளியை வெளி்யேற்றும் வேறு மருந்து உண்டு.
முன்பு காய்ச்சலுக்கு உபயோகித்த ஆன்டி-பயாடிக் மாத்திரைகளை அடுத்தமுறை காய்ச்சல் வரும் வரை வைத்திருந்து கொடுக்காதீர்கள்.
சில மருந்துகளின் பலன் உடனே தெரிவதில்லை. நோய் சீக்கிரம் குணமாக வேண்டி அதிக அளவு மருந்து கொடுப்பது ஆபத்தில் முடியும். குடல் புண்ணாகி விடும் - அனேக ஆன்டிபயாடிக் மருந்துகள் சாப்பாட்டிற்கு ஒரு மணி நேரம் முன் அல்லது பின் சாப்பிட வேண்டும்.
- மருந்தை மற்ற உணவுகளுடன் கலந்து சாப்பிடாமல் தண்ணீருடன் மட்டுமே சாப்பிடவும்.
- மருந்துக்கள் குழநதைகளுக்கு எட்டும்படி வைக்க வேண்டாம். வீட்டில் மற்றவர்களின் மருந்துகளுடன் சேர்த்து வைக்கவேண்டாம்.
- நீங்கள் ஏற்கனவே எதாவது மருந்து தொடர்ந்து எடுத்துக் கொண்டிருந்தாலோ, கர்ப்பிணியாக இருந்தாலோ, வயிற்றுப்புண், சர்க்கரை, இரத்தஅழுத்தம் இருந்தாலோ உங்கள் மருத்துவரிடம் தவறாமல் கூறிவிடுங்கள். அதற்கேற்ற மருந்துகள் எழுதித்தருவார்.
- ஒரே நேரம் வெவ்வேறு மருத்துவர்களிடம் சிகிட்சை பெறாதீர்கள். உதாரணமாக பல்வலிக்கு பல் மருத்துவரிடம் போகிறீர்கள். அவர் ஒரு வலி நிவாரணி எழுதி தந்து அதை சாப்பிட்டு வருகிறீர்கள். அடுத்து மூட்டு வலிக்கு வேறு மருத்துவரிடம் போய் வலி நிவாரணி மருந்து வாங்கி அதையும் சாப்பிடும்போது மருந்து ஒவர் டோஸ் ஆகிவிடும்.
மருத்துவர் தரும் மருந்துகள் அதே அளவில் அதே நேரத்தில் சாப்பிடவும். நோயிலிருந்து சிறிது ஆசுவாசம் கிடைத்ததும் மருந்துக்களை நிறுத்தி விடக்கூடாது. - மருத்துவர் ஆலோசனைப்படி தவிர்க்க வேண்டிய உணவுகளை தவிர்த்து சேர்க்க வேண்டியவைகளை சேர்த்து உண்ணவும்.
சில மருந்துகளை சாப்பிடும்போது சிலருக்கு ஓவ்வாமை ஏற்படலாம். உடனே அந்த மருந்தை நிறுத்திவிட்டு மருத்துவரிடம் சொல்லுங்கள்.
அவசரம் இல்லாத பட்சத்தில் இன்ஜெக்ஸனை விட வாய் வழி மருந்து தான் பாதுகாப்பு. - மருத்துவர் எழுதித்தந்து வாங்கிய மருந்தானாலும் அவரிடம் ஒருமுறை காட்டி சரி பார்த்துக் கொள்ளவும். போலி மருந்துகள் நிறைய மார்கட்டில் உள்ளன எச்சரிக்கையாக இருங்கள்.
- விலையுர்ந்த சில கம்பனி மருந்துக்களை எழுதித்தந்தால் அதற்கு நிகரான ஜெனெரிக் மருந்துகள் உண்டா? என்று கேளுங்கள். ஜெனெரிக் மருந்துகள் பொதுவாக மிகவும் விலை குறைவாக கிடைக்கும். இரண்டிலும் ஒரே மருந்து தான் இருக்கும். உதாரணமாக "பனடால்” என்ற காய்ச்சல், வலி நிவாரண மாத்திரைக்கு நிகரான ஜெனெரிக் மாத்திரை "பேராசிட்டமால்". பனடாலில் இருப்பது பேராசிட்டமால் தான். இது பெரும் பணத்தை மிச்சப்படுத்தும்.
மருத்துவர் எழுதித்தரும் மாத்திரைகளின் ஒருமடங்கு டோஸ் கூடிய மாத்திரைகள் பெரும்பாலும் அதே விலையில் கிடைக்கும். அதை வாங்கி பாதி மாத்திரை சாப்பிட்டால், மாத்திரை செலவு பாதியாகும். உதாரணமாக 40 mg மாத்திரைக்குப் பதில் 80 mg மாத்திரை வாங்கி பாதி சாப்பிடவும். ஆனால் குழாய் மாத்திரைகளயும், சிறப்பு பூச்சு பூசிய மாத்திரைகளயும் இம்முறையில் வெட்டிச் சாப்பிடதீர்கள். மருத்துவர் பரிந்துரை படி செய்யுங்கள். - மூன்று வேளை மாத்திரை சாப்பிடச் சொன்னால் செலவு கருதி இரன்டு மாத்திரை போதும் என்று நீங்களாக சுருக்கிகொள்வது மிக ஆபத்தில் போய் முடியும்.
- இரதக்கொதிப்பு போன்ற நோய்களுக்கு தொடர்ந்து நீங்கள் மருந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் மருத்துவரிடம் கேளாமல் திடீரெனெ நிறுத்துவது மிக ஆபத்தாகிவிடும்.
- காய்ச்சலுக்கு மருத்துவரிட்ம் செல்கிறீகள். அவர் எழுதி தந்த மருந்தில் நோய் குணமாகவில்லை, அடுத்தமுறை செல்லும்போது அவர் வேறு மருந்து எழுதி தருவார். இப்போது நீங்கள் புதிய மருந்துடன் மீத மிருக்கும் பழய மருந்தையும் சேர்த்து சாப்பிடாதீர்கள். இப்போது எழுதித் தந்ததையே தொடருங்கள்.
Abdul Rahman
Kilakarai.
Thursday, January 14, 2010
உங்கள் ஆசைகள் நிறைவேற...
உங்களின் உணவு விஸ்தீரணப்படுத்தப்பட வேண்டுமா? உங்களின் வாழ்நாள் நீள வேண்டுமா?
தனது உணவு விஸ்தீரணப்படுத்தப்பட வேண்டுமென்று யார் ஆசைப்படுகின்றாரோ இன்னும் தன் வாழ் நாள் நீள வேண்டுமென்று ஆசைப்படுகின்றாரோ அவர் தன் இரத்த பந்தத்தை சேர்த்து நடக்கட்டும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)
அல்லாஹ் உங்களை பாதுகாக்க வேண்டுமென்று விரும்புகின்றீர்களா?
யார் ஸுப்ஹுத் தொழுகையை தொழுகின்றாரோ அவர் (அன்றைய தினம்) அல்லாஹ்வின் பொறுப்பிலிருக்கின்றார் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
உங்களின் பாவங்கள் அதிகமாக இருந்தாலும், அது மன்னிக்கப்பட வேண்டுமென்று விரும்புகின்றீர்களா?
யார் ஒரு நாளில் நூறு தடவை سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி' என ஓதுகின்றாரோ, அவரின் பாவங்கள் கடல் நுரையளவு இருந்தாலும், அது மன்னிக்கப்படும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
அல்லாஹ் உங்கள் மீது, அருள்புரிய வேண்டுமென நீங்கள் விரும்புகின்றீர்களா?
யார் என்மீது ஒரு தடவை ஸலவாத்து கூறுகின்றாரோ, அவருக்கு அல்லாஹ் பத்து தடவை ஸலவாத்து கூறுகின்றான் (அருள் புரிகின்றான்); என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)
அல்லாஹ் உங்களின் அந்தஸ்தை உயர்த்த வேண்டுமென்று விரும்புகின்றீர்களா?
யார் அல்லாஹ்வுக்காக பணிந்து நடக்கின்றாரோ, நிச்சயமாக அல்லாஹ் அவரின் அந்தஸ்தை உயர்த்துகின்றான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
அல்லாஹ்விற்கு சமீபத்தில் இருக்க விரும்புகின்றீர்களா?
ஒரு அடியான் தன் இரட்சகனிடம் மிக சமீபமாக உள்ள நேரம், அவன் சுஜுது செய்யும் நேரமாகும். ஆகவே (அந்த நேரத்தில்) அதிகம் பிரார்த்தியுங்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
ஹஜ் செய்த நன்மையைபெற விரும்புகின்றீர்களா?
ரமளான் மாத்தில் உம்ரா செய்வது ஹஜ்ஜுக்கு சமமாகும் அல்லது என்னுடன் ஹஜ் செய்ததற்கு சமமாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
சுவர்க்கத்தில் வீடு கிடைக்க வேண்டும் என விரும்புகின்றீர்களா?
அல்லாஹ்விற்காக யார் ஒரு பள்ளியை கட்டுகின்றாரோ, அல்லாஹ் அவருக்காக அதுபோன்ற (வீட்டை) சுவர்க்கத்தில் கட்டுகின்றான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
அல்லாஹ்வின் திருப்தியை அடைய விரும்புகின்றீர்களா?
ஒரு கவள உணவை உண்டுவிட்டு அல்லாஹ்வை புகழும் அடியானையும், ஒரு வாய் தண்ணீர் அருந்திவிட்டு அல்லாஹ்வை புகழும் அடியானையும் நிச்சயமாக அல்லஹ் பொருந்திக் கொள்கின்றான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
உங்களின் பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்பட வேண்டுமென்று விரும்புகின்றீர்களா?
பாங்குக்கும் இகாமத்துக்குமிடையில் பிரார்த்தனை தட்டப்படுவதில்லை என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூதாவூத்)
ஒரு வருடம் முழுமையாக நோன்பு நோற்ற நன்மை கிடைக்க வேன்டுமென விரும்புகின்றீர்களா?
ஓவ்வொரு மாதமும் மூன்று நோன்பு நோற்பது, வருடமெல்லாம் நோன்பு நோற்பதற்கு சமமாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
மலையளவு நன்மை கிடைக்க வேண்டுமென்று விரும்புகின்றீர்களா?
ஒரு ஜனாஸாவிற்கு தொழுகை நடத்தப்படும் வரை அந்த ஜனாஸாவில் யார் கலந்து கொள்கின்றாரோ அவருக்கு ஒரு கிராத்து நன்மையும், அந்த ஜனாஸா அடக்கம் செய்யப்படும் வரை யார் கலந்து கொள்கின்றாரோ அவருக்கு இரு கிராத்து நன்மையும் கிடைக்கும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். இரு கிராத்து என்றால் என்ன? என்று கேட்கப்பட்டது.. இரு பெரும் மலை அளவு என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
சுவர்க்கத்தில் நபி(ஸல்) அவர்களுடன் இருக்க விரும்புகின்றீர்களா?
நானும் அனாதையை பொறுப்பெடுப்பவரும் இவ்வாறு சுவர்க்கத்தில் இருப்போம் என, நபி(ஸல்) அவர்கள் தனது நடு விரலையும் ஆள்க்காட்டி விரலையும் சுட்டிக்காட்டினார்கள். (புகாரி)
விதவைக்கும் மிஸ்கீனுக்கும் உதவி செய்பவர் அல்லாஹ்வின் பாதையில் போர் செய்பவரைப் போன்றவராவார், இப்படியும் நபி(ஸல்) அவர்கள் கூறியதாக எண்ணுகின்றேன், அதாவது இரவெல்லாம் நின்று வணங்குபவரைப் போன்றும் விடாமல் நோன்பு நோற்பவரைப் போன்றும் என்று.(அறிவிப்பாளருக்கு ஏற்பட்ட சந்தேகம்) (புகாரி, முஸ்லிம்)
நபி(ஸல்) அவர்களே உங்களுக்கு சுவர்க்கத்தை பெற்றுத்தர விரும்புகின்றீர்களா?
யார் தன்னுடைய இரு தாடைகளுக்கு மத்தியிலுள்ளதையும், இரு கால்களுக்கு மத்தியிலுள்ளதையும் (ஹராத்திலிருந்து பாதுகாத்துக் கொள்வதாக) எனக்கு உத்தரவாதம் அளிக்கின்றாரோ, அவருக்கு சுவர்க்கத்தை வாங்கிக் கொடுப்பதற்கு நான் உத்தரவாதம் அளிப்பேன் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
மரணத்துக்குப் பின்னும், உங்களின் நன்மைத்தட்டில், நன்மை எழுதப்பட வேண்டுமா?
ஒரு மனிதன் மரணித்தால் மூன்றைத்தவிர மற்ற எல்லா அமல்களும் துண்டித்து விடும், நிரந்தர தர்மம், பிரயோஜனம் உள்ள அறிவு, தனக்காக பிரார்த்தனை செய்யும் ஸாலிஹான பிள்ளை என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
சுவர்க்க பொக்கிஷங்களில் ஒரு பொக்கிஷம் உங்களுக்கு கிடைக்கவேண்டும் என விரும்புகின்றீர்களா?
لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِالله லா ஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லாஹ் என்று கூறுவது சுவர்க்க பொக்கிஷங்களில் ஒரு பொக்கிஷமாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
முழு இரவு நின்று வணங்கிய நன்மை கிடைக்க வேண்டும் என்று விரும்புகின்றீர்களா?
யார் இஷாத் தொழுகையை ஜமாஅத்துடன் தொழுகின்றாரோ அவருக்கு பாதி இரவு நின்று வணங்கிய நன்மை கிடைக்கும், யார் சுப்ஹுத் தொழுகையையும் ஜமாஅத்துடன் தொழுகின்றாரோ அவருக்கு முழு இரவும் நின்று வணங்கிய நன்மை கிடைக்கும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
ஒரு நிமிடத்தில் குர்ஆனின் மூன்றில் ஒரு பகுதியை ஓதிய நன்மை கிடைக்க வேண்டும் என்று விரும்புகின்றீகளா?
சூரத்துல் இக்லாஸை ஒரு தடவை ஓதுவது குர்ஆனின் மூன்றில் ஒரு பகுதிக்கு சமமாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
உங்களின் நன்மைத் தராசு, அதிகம் இடையுள்ளதாக ஆக வேண்டும் என விரும்புகின்றிர்களா?
இரு வார்த்தைகள் ரஹ்மானுக்கு விருப்பமானது, நாவுக்கு இலகுவானது, தராசில் கனமானது (அவ்விரு வார்த்தை) سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ سُبْحَانَ اللهِ الْعَظِيْم சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி, சுப்ஹானல்லாஹில் அளீம்' என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)

Wednesday, January 6, 2010
படித்ததும் கலங்கிய ஒரு விசயம்
வளைகுடா மாப்பிள்ளை
துபாயிலிருந்து சுல்தான், மனைவி ஜமீலாவின் கடிதத்திற்கு கண்ணீர் மல்க பதில் எழுதிக்கொண்டிருக்கின்றான்.
அன்புள்ள மனைவிக்கு,
நமது தெருவிலேயே நமது வீடுதான் இரண்டு அடுக்கு மாடி வீடு என்று நீ எழுதிய செய்தி கண்டு மிக்க மகிழ்ச்சியடைந்தேன்.
சொந்த வீடே இல்லாமல் ஒரு ஓட்டு வீட்டில் கஷ்டப்பட்டு வாடகைக்கு குடியிருந்த நாம் இப்பொழுது தெருவிலேயே பெரிய வீடாக கட்டியிருக்கிறோம். அவ்வளவு பெரிய வீடு கட்டுவதற்கு நான் இங்கு எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா..? நான் பட்ட கஷ்டம் வீண் போகவில்லை என்பது குறித்து மிக்க மகிழ்ச்சியடைந்தேன்.
நான் இன்னும் ஒரு மாதத்தில் ஊருக்கு வரலாமென இருக்கின்றேன். இது பற்றி உன் முடிவைச் சொல்..
என்று மனைவிக்கு கடிதம் எழுதி அனுப்பிவிடுகின்றான். ஒருவாரம் கழித்து மனைவி ஜமீலாவிடமிருந்து பதில் கடிதம் வருகின்றது
அன்புள்ள கணவனுக்கு
தங்களுடைய கடிதம் கண்டு மகிழ்ச்சி. நீங்கள் கூறியது போல நமக்கு சொந்தமாக வீடு வருவதற்கு அயல்தேச மண்ணில் நீங்கள் பட்ட கஷ்டங்களை நானும் அறிவேன்.
அதற்கு ஈடு இணையே இல்லை. எல்லாவற்றையும் நீங்கள் இழந்து நமக்கொரு வீடு உருவாவதற்கு பாடுபட்டுள்ளீர்கள்.
நீங்கள் இன்னும் ஒரு மாதத்தில் வருவதாக எழுதியிருந்தீர்கள். எனக்கு மகிழ்ச்சிதான். ஆனால் இவ்வளவு கஷ்டப்பட்டு விட்டோம் . நமக்கென்று ஒரே ஒரு கார் எனது அக்கா மாப்பிள்ளை வாங்கியது போல வாங்க வேண்டும் என்று விருப்பம். ஆகவே அதற்கு மட்டும் எப்படியாவது வழிசெய்தீர்கள் என்றால் நாம் அவர்களுக்கு இனையாக இருக்கலாம்.
மனைவியின் கடிதத்தைக் கண்டு "அய்யோ மனைவியின் இந்த விருப்பத்தை நாம் கண்டிப்பாக நிறைவேற்ற வேண்டுமே . இவ்வளவு கஷ்டப்பட்டு விட்டோம். அவள் விருப்பப் படி காருக்காகவும் கொஞ்சம் உழைப்போம்" என்று நினைத்து இன்னும் ஒரு வருடம் கழித்துச் செல்லலாமென முடிவெடுக்கின்றான்.
பின்னர் பல மாதம் கழித்து மனைவியின் விருப்பப்படி மனைவியின் அக்கா மாப்பிள்ளை வாங்கியதை விடவும் அழகான விலை உயர்ந்த கார் ஒன்றை வாங்கி விடுகிறான். பின் பதில் கடிதம் எழுதுகின்றான்.
அன்புள்ள மனைவிக்கு,
நீ கூறியபடி நமக்கென்று ஒரு கார் வாங்கியது உனக்கு மகிழ்ச்சியூட்டக்கூடும் என்று நினைக்கின்றேன். நீ கூறியபடி நாம் ஆடம்பரமாக வாழலாம் . கவலைப்படாதே.
நான் இன்னும் சில மாதங்களில் ஊருக்கு வருகின்றேன். உனக்கு என்ன என்ன தேவை என்பதை எனக்கு தெரியப்படுத்து.
உடனே மனைவியும் ஏற்கனவே பட்டியலிட்டு வைத்திருந்த தேவைகளை கணவனுக்கு பதிலாக எழுதிவிட்டு கணவனின் வருகைக்காக காத்திருக்கின்றான்.
கணவன் வரும் நாள் அன்று மிக மகிழ்ச்சியாக புது வீட்டில் - புதிய காருடன் காத்திருக்கின்றாள். அப்பொழுது ஒரு தொலைபேசி அழைப்பு ஒன்று வருகின்றது.
ஏர்போர்ட்டிலிருந்து வரும் வழியில் சுல்தான் விபத்துக்குள்ளாகி மரணமடைந்து விட்டான் என்றும் பிணத்தை வாங்கிச் செல்லுமாறும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்
அப்படியே இடிந்து போய் உட்காருகின்றாள் ஜமீலா. பின்பு நிலைமை உணர்ந்த உறவினர்கள் அந்தப் புதிய காரை எடுத்துக்கொண்டு சுல்தானின் பிணத்தை எடுக்க தயாராகும்பொழுது உறவினர்களுள் ஒருவர் ,
அட! புதுக்கார்ல பிணத்தை எடுக்கக் கூடாதுப்பா..ஏதாவது பழைய வண்டியை வாடகைக்கு பிடிச்சிட்டு போங்க எனக்கூற பின்பு பழைய வண்டி ஒன்றை வாடகைக்கு பிடித்துச் சென்றனர்.
புதிய வீட்டில் முதன் முதலில் பிணத்தைக் கொண்டு வரக்கூடாது என்றும் சில அறிவுஜீவி உறவினர்கள் கூற அவர்கள் வாழ்ந்த பழைய வீடொன்றில் சுல்தானின் பிணம் கொண்டு வரப்பட்டு மனைவி உறவினர்கள் கதறலுக்குப்பிறகு சுல்தானின் பிணம் அடக்கப்பட்டுவிட்டது
மனைவி ஜமீலா அந்தப் புதியகாரையும் - வீட்டையும் வெறித்துப் பார்த்தபடி நிற்கின்றாள்.
எங்கிருந்தோ அப்பொழுது திருக்குர்ஆனின் வாசகங்கள் காதில் வந்து விழுகின்றது
"மண்ணறை செல்லும் வரையிலும் செல்வத்தை தேடிக்கொண்டே இருப்பீர்கள் என்று"
மனிதனை இறைவன் படைப்பதற்க்கு முன்னே அவனுககு தேவையான அனைத்தையும் படைத்து விட்டான் இது தெரியாத மனிதன் இறைவனை குறை கூறுகிறான்!
by
Abdul Rahman.

Subscribe to:
Posts (Atom)