Tuesday, June 8, 2010

மனிதனின் பலகீன நிலை பாரீர்!

மனிதனின் பலகீன நிலை பாரீர்!

மண்ணிலிருந்து படைக்கப்பட்ட மனித இனத்தைப் பற்றி எல்லாம் வல்ல அல்லாஹ் கீழ்க்கண்ட குர்ஆன் வசனங்களில் தெளிவாக எடுத்துரைக்கிறான். அவை வருமாறு:
4:28 பலகீனமாக படைக்கப்பட்டவன்.
10:44 தனக்குத்தானே அநியாயம் செய்கிறான்.
11:9 நன்றி கெட்டவன்
14:34 மிக்க அநியாயக்காரன், நன்றி கெட்டவன்
16:4 பகிரங்க எதிரி
17:11 அவசரக்காரன்
17:67 நன்றி மறப்பவன்
17:85 மிக மிக அற்ப அறிவை மட்டுமே உடையவன்
17:100 கஞ்சனாக இருக்கிறான்
18:54 அதிகமாகத் தர்க்கம் செய்கிறான்
21:37 அவசரக்காரன்
22:66 நன்றி கெட்டவன்
29:66 இறைவனுக்கு மாறு செய்கிறவன்
33:72 அநியாயக்காரன், மூடன்(ஜாஹில்)
36:77 வெளிப்படையான தர்க்கவாதி
39:8 நேர்வழியிலிருந்து வழி கெடுக்கிறான்
41:49 நிராசைக்காரன்
42:48 நிராகரிப்பவன்
43:15 பகிரங்கமான பெரும் நிராகரிப்பவன்
70:19 அவசரக்காரன்
75:5 மறுமையை பொய்ப்பிக்கிறான்
76:27 மறுமையை மறந்து இவ்வுலகை நேசிக்கிறான்
80:17 நன்றி மறந்தவன்
87:16 மறுமையை மறந்து இவ்வுலகை தெரிவு செய்கிறான்
89:20 பொருளை அளவு கடந்து நேசிக்கிறான்
89:23 நரகம் முன் கொண்டு வரப்படும்போது உணர்வான்
90:4 கஷ்டத்தில் படைக்கப்பட்டவன்
95:5 செயலினால் கீழ்நிலை அடைகிறான்
96:6 வரம்பு மீறுகிறான்
100:6 இறைவனுக்கு நன்றி கெட்டவன்
100:8 பொருளை நேசிப்பதில் அளவு கடந்தவன்
103:2 பெரும் நஷ்டத்தில் இருக்கிறான்

இந்த அனைத்து இறைவாக்குகளையும் மனிதன் படித்து விளங்குவானேயானால் தன்னுடைய இயலாமை-பலகீன நிலை பற்றித் தெளிவாக அறிவான். அவனிடம் ஆணவம், அகங்காரம், தற்பெருமை, நான்தான் என்ற மமதை ஒருபோதும் ஏற்படாது. தன்னைப் படைத்த இறைவனின் ஆற்றல், அதிகாரம் இவை அனைத்தையும் திட்டமாக, தெளிவாக உணர்வான்.

இவ்வளவு குறைபாடுகள் உள்ள மனிதனுக்குக் கொடுக்கப்பட்ட அறிவோ மிகமிக அற்பமானது என்று 17:85ல் அல்லாஹ் கூறி மனிதனுடைய ஆற்றல் குறைவை வெளிப்படுத்தியுள்ளான். மனிதனுக்குக் கொடுக்கப்பட்ட அற்ப அறிவை இறைவனது நிறைவான அறிவுடன் ஒப்பிடும்போது, சமுத்திரத்தில் ஒரு ஊசியை முக்கி எடுத்தால் அதிலுள்ள நீரளவுதானும் மனித அறிவு இல்லை. அந்த அற்ப உலக அறிவிலும் தனி மனிதனுடைய அறிவு, கற்றது கைமண் அளவு; கல்லாதது உலகளவு என்பதை யாரே மறுப்பார்.

பல்வேறு துறைகளில் சிரமப்பட்டு மிகக் கடினமாக உழைத்துப் படித்துப் பட்டங்கள் பல பெற்ற ஒரு பேரறிஞரிடம் முதலாம் வகுப்புப் படிக்கும் கத்துக்குட்டி இல்லை, ஒரு பிரிகேஜி பிஞ்சு எதிர்வாதம் செய்தால் அவனைப்பற்றி என்ன சொல்வோம். அதைவிட மிகமிகக் கேவலமான இழிவான நிலைதான் மிக அற்ப அறிவை உடைய மனிதன் அல்லாஹ் தெள்ளத் தெளிவாக இறக்கியருளிய அல்குர்ஆனிலுள்ள கட்டளைகளுக்கு மேல் விளக்கம் கொடுக்க முற்படுவதாகும்.

தங்களை மவ்லவிகள், ஆலிம்கள், அல்லாமாக்கள், ஷேக்குகள் என பெருமை பேசும் மனிதர்கள் இப்படிப்பட்ட அறிவீனமான இழி செயலைச் செய்ய முற்படுகிறார்கள். மார்க்கத்தை-நேர்வழியை பல கோணல் வழிகளாக்கி-மதமாக்கி அது கொண்டு வயிறு வளர்ப்பவர்கள், நிச்சயம் அல்குர்ஆனில் உள்ளதை உள்ளபடி ஒருபோதும் சொல்ல முடியாது. 2:159,161,162, 7:175-179 இறைவாக்குகள் கூறும் உண்மை இதுவே. மனித சுபாவமே ஷைத்தானின் ஆசை வார்த்தைகளில் மயங்கி அல்லாஹ்வின் கட்டளைகளைப் புறக்கணித்து- நிராகரித்து (25:30) ஷைத்தானைப் பின் தொடர்வதாகவே இருக்கிறது. இது ஆதித் தந்தை ஆதத்தில் தொடங்கி, அவரது மகன், மார்க்கத்தை மதமாக்கும் புரோகிதர்கள், புரோகிதர்களது பக்தர்கள் என தொடர் கதையாகத் தொடர்கிறது. புரோகிதர்களின் வசீகர உடும்புப் பிடியிலிருந்து விடுபட்டு நேரடியாக குர்ஆன், ஆதாரபூர்வமான நபிமொழிகளைப் படித்து விளங்கி அவற்றில் உள்ளது உள்ளபடிச் செயல்படுகிறவர்களே வெற்றியாளர்கள்.

By

Abdul Rahman
Doha

No comments:

Post a Comment